ஷங்கர் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா ராம்சரண்...என்ன ரோல் ?

சென்னை : டைரக்டர் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் அவர் என்ன ரோலில் நடிக்கிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

தெலுங்கில் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படம் தான். ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம் சரணுக்கு இருக்கும் மாஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களின் ஆர்வமும் அதிகரித்துள்ளது.

ராம் சரணுக்கு முதல் முறை

ராம் சரணுக்கு முதல் முறை

ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி வசூலை கடந்துள்ளது. 1000 கோடி வசூலை தாண்டுவது ராஜமெளலிக்கு புதியதல்ல. இவர் இயக்கிய பாகுபலி 2 ஏற்கனவே 1800 கோடி வசூலை பெற்றுள்ளது. ஆனால் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆருக்கு 1000 கோடி வசூலை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அதனால் அவர்களின் அடுத்தடுத்த படங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ராம் சரணின் ரோல் என்ன

ராம் சரணின் ரோல் என்ன

லேட்டஸ்ட் தகவலின்படி, ஷங்கர் இயக்கும் ஆர்சி 15 படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். இரண்டுமே முற்றிலும் மாறுபட்ட ரோல்களாம். அப்பா-மகன் என இரட்டை ரோல்களில் தான் ராம் சரண் நடித்துள்ளாராம். அப்பா ராம் சரண் கேரக்டர் வருவது ஃபிளாஷ்பேக் காட்சிகளாம். இந்த இரண்டு ரோல்களுமே செம பவர்ஃபுல்லாக, தனித்துவமாக இருக்குமாம். இந்த இரண்டு கேரக்டர்களும் சந்திப்பார்களா, சந்தித்துக் கொள்ள மாட்டார்களா என்பது தான் ஆர்சி 15 கதையாம்.

எங்கு ஷுட்டிங் நடக்குது

எங்கு ஷுட்டிங் நடக்குது

தற்போது ஆர்சி 15 படத்தின் ஷுட்டிங் ராஜமகேந்திரவரம் என்ற இடத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு தான் ஃபிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம். அஞ்சலி மற்றும் ராம் சரண் நடிக்கும் பாடல், ஆக்ஷன் உள்ளிட்ட மற்ற காட்சிகள் படமாக்கப்பட்டதாம். இந்த ஷுட்டிங் மார்ச் 4 ம் தேதி நிறைவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஐதராபாத்தில் துவங்கப்பட உள்ளதாம்.

ஹீரோயினுக்கு என்ன ரோல்

ஹீரோயினுக்கு என்ன ரோல்

டைரக்டர் ஷங்கர் இயக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இந்த படத்தில் கியாரா அத்வானி, ராம் சரண் மீது காதல் கொள்ளும் பெண்ணாக நடித்துள்ளாராம். அஞ்சலி, ராம் சரணின் அம்மா ரோலில் நடித்துள்ளாராம். இதனால் படத்தை எப்போது முடிப்பார்கள், எப்போது ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X