»   »  அடக்கத்துக்கு அப்பாலும் ஒரு திமிர் இருக்கிறது- ராஜமௌலியை ட்விட்டரில் சாடிய ராம் "கோவாலு" வர்மா

அடக்கத்துக்கு அப்பாலும் ஒரு திமிர் இருக்கிறது- ராஜமௌலியை ட்விட்டரில் சாடிய ராம் "கோவாலு" வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அடக்கத்திற்கு அப்பாலும் ஒரு திமிர் உங்களிடம் இருக்கிறது என்று ட்விட்டரில் இயக்குநர் ராஜமௌலியை சாடியிருக்கிறார் சர்ச்சைகளுக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா.

ட்விட்டரில் அடிக்கடி ஏதேனும் சர்ச்சையாக ட்வீட் செய்து அவ்வப்போது பரபரப்பாக்குவது இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் வேலைகளில் ஒன்று.

சமீபத்தில் ராம் கோபால் வர்மாவிடம் இயக்குநர் ராஜமௌலி சிக்கிக் கொண்டார், இருவரின் உரையாடலை கீழே காணலாம்.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

சமீப காலமாக எந்த செய்தியும் நம்மைப் பற்றி இல்லையே என்று ராம் கோபால் வர்மா நினைத்தாரோ என்னவோ ஆசிரியர் தினம் அன்று 'நான் ஹேப்பி டீச்சர்'ஸ் டே சொல்லி இந்த ஒரு நாளை மட்டும் கொண்டாட மாட்டேன்.நான் இன்று சந்தோஷமாக இருக்கக் காரணம் என் ஆசிரியர்கள் தான்" என்று ஒரு ட்வீட்டை போட்டு விட்டார். அவர் நினைத்த மாதிரியே சற்று நேரத்தில் நிகழ்ந்தது. மற்றொரு இயக்குனரான ராஜமௌலி நீங்கள் தான் எங்கள் ஆசிரியர் என ராம் கோபால் வர்மாவின் ட்வீட்டிற்கு பதில் ட்வீட் போட்டார்.

SS என்பதற்கு அர்த்தம்

இதனை ஒப்புக் கொள்ளாத ராம் கோபால் வர்மா இன்னொரு ட்வீட்டில் 'SS ராஜமௌலி என்பதில் SS என்பதற்கு என்ன அர்த்தம் என இப்போதுதான் எனக்கு தெரியவந்தது. அதாவது SS என்பது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் (புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவர்) என ட்வீட் செய்து ராஜமௌலியிடம் கேட்டிருந்தார்.

திட்டு வாங்க வைக்காதீர்கள்

அதற்குப் பதிலளித்து ராஜமௌலி போட்டிருந்த பதிவில்,மக்களிடம் இப்போது என்னை திட்டு வாங்க வைக்க வேண்டியது அவசியமா'? எனக் கேட்டவர் கூடவே கையெடுத்து கும்பிடும் படியான ஸ்மைலி குறி ஒன்றையும் போட்டிருந்தார்.

அடக்கத்திற்கு அப்பாலும் ஒரு திமிர்

ஆனாலும் விடாத ராம் கோபால் வர்மா, 'அடக்கத்துக்கு அப்பாலும் ஒரு எல்லையில் திமிர் இருக்கிறது சார்' என பதிலடி கொடுத்தார். அதோடு ராஜமௌலி ஆளையே காணோம்.

கலந்து கொண்ட ஸ்டார்கள்

கலந்து கொண்ட ஸ்டார்கள்

இந்த உரையாடலில் பாகுபலி நாயகன் பிரபாஸ், பவர் ஸ்டார் பவன் கல்யாண் மற்றும் இளம்நாயகன் அகில் அக்கினி ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ராம் கோவாலு வர்மா என்பது உண்மைதான் போல...

English summary
Ram Gopal Varma Compared Baahubali director SS Rajamouli to Hollywood’s Steven Spielberg.“I just now came to know that the SS in SS Rajamouli stands for Steven Spielberg (sic),” the maverick director posted on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil