twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாஜக தலைவர் அத்வானியை அழ வைத்த ராம்கோபால் வர்மா!!

    By Siva
    |

    மும்பை: சர்ச்சைக்கு பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா மும்பை தாக்குதல்களை அடிப்படையாக வைத்து எடுத்த தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 படத்தை பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு போட்டுக் காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த அத்வானி அழுதேவிட்டாராம்.

    இயக்குனர் ராம்கோபால் வர்மா உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படம் எடுப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். அதனால் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கலங்காதவர். அவரது படங்கள் பிரச்சனை இன்றி ரிலீஸாகிவிட்டால் அது தான் அதிசயம். பல்வேறு உண்மை சம்பவங்களை வைத்து படம் எடுத்த அவர் லேட்டஸ்டாக கையில் எடுத்தது மும்பை தாக்குதல்கள் சம்பவத்தை தான்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து மும்பை தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களைத் தாக்கியதை தத்ரூபமாக படமாக்கி மனிதர் இன்று ரிலீஸும் செய்துவிட்டார். இந்நிலையில் ராம்கோபால் வர்மாவின் சில சர்ச்க்குரிய படங்களைப் பார்ப்போம்.

    ரக்த சரித்ரா

    ரக்த சரித்ரா

    சூர்யா, விவேக் ஓபராயை வைத்து ராம்கோபால் வர்மா எடுத்த படம் ரக்த சரித்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீஸானது. ஆந்திர மாநிலம் ராயலசீமாவைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வும், தாதவுமான பரிதலா ரவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுத்த படமே ரக்த சரித்ரா. ரவிக்கும், சூரியநாராயண ரெட்டி (எ) சூரிக்கும் இடையேயான மோதலை படத்தில் காண்பித்திருந்தார். இந்த படத்திற்கு ரவியின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். படம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரிலீஸானது. படத்தை எடுக்க ராம்கோபால் வர்மா சிறையில் இருந்த சூரியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாட் எ லவ் ஸ்டோரி

    நாட் எ லவ் ஸ்டோரி

    2008ம் ஆண்டு தொலைக்காட்சி பிரபலமான நீரஜ் குரோவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் நாட் எ லவ் ஸ்டோரி. 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி ரிலீஸான இந்த படத்தில் மஹீ கில், தீபக் தோப்ரியால், அஜய் கெஹி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

    தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 பார்த்து அழுத அத்வானி

    தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 பார்த்து அழுத அத்வானி

    மும்பை தாக்குதல் சம்பத்தை அடிப்படையாக வைத்து ராம்கோபால் எடுத்துள்ள படம் 'தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11'. இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை ரிலீஸ் செய்யும் முன்பு அதை அவர் பாஜக தலைவர் அத்வானிக்கு போட்டு காட்டியுள்ளார். படத்தைப் பார்த்த அத்வானி அழுதுவிட்டாராம். அட மொக்கன்னு இல்லப்பா, படம் அவ்வளவு நன்றாக இருந்ததாம். படத்தை பார்த்த பிறகு அதைப் பற்றி பலரிடம் புகழ்ந்து பேசியுள்ளார் அத்வானி.

    அமீரக சென்சார் போர்டு நிராகரிப்பு

    அமீரக சென்சார் போர்டு நிராகரிப்பு

    தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 படத்தைப் பார்த்த அமீரக சென்சார் போர்டு அதை அந்த நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் பஹ்ரைன் மற்றும் ஓமான் அரசுகள் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துள்ளன.

    படம் ஒரு தெளிவான குழப்பம்

    படம் ஒரு தெளிவான குழப்பம்

    இன்று ரிலீஸான தி அட்டாக்ஸ் ஆஃப் 26/11 படத்தைப் பார்த்தவர்கள் ராம்கோபால் வர்மா ஒரு தெளிவான குழப்பத்தில் படத்தை எடுத்துள்ளார் என்றனர். மேலும் படத்தில் அனைத்து மசாலாக்களும் சரியான அளவில் கலந்து கொடுத்துள்ள போதிலும் அது சுவைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    BJP senior leader LK Advani watched the special screening of the movie 'The attacks of 26/11' directed by Ram Gopal Varma. Advani was moved by the movie and shed tears.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X