For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகையின் காலில் முத்தமிட்ட விவகாரம்...மோசமான விளக்கம் கொடுத்த ராம்கோபால் வர்மா!

  |

  மும்பை : நடிகையின் காலில் முத்தமிட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா அதற்கு மோசமான விளக்கம் அளித்துள்ளார்.

  இயக்குநர் கொடுத்த விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள், காலில் முத்தம் கொடுத்ததற்கு இப்படி ஒரு விளக்கமா என கேட்டு வாய் பிளந்துள்ளனர்.

  தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் தான் ராம்கோபால் வர்மா. ஆக்ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப்பின்னணி போன்ற கதைக்களத்தை கையில் எடுத்து இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் எப்போதும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது இவருடைய வழக்கம்.

  நேற்று ராம்...இன்று ஆயிஷா..தப்பித்த ஜனனி..இனிமேல் தான் தரமான சம்பவம் லோடிங்!நேற்று ராம்...இன்று ஆயிஷா..தப்பித்த ஜனனி..இனிமேல் தான் தரமான சம்பவம் லோடிங்!

  ராம் கோபால் வர்மா

  ராம் கோபால் வர்மா

  பாலிவுட்டின் சர்ச்சை நாயகன் என பெயர் எடுத்தவர் ராம்கோபால் வர்மா, சோஷியல் மீடியாவிலும் எக்குத்தப்பான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். நடிகர், நடிகைகள்,அரசியல்வாதிகள், பிரபலங்கள் என ஒருத்தரையும் இவர் விட்டுவைத்தது இல்லை. இதனால், இவரது பெயரைக் கேட்டாலே பாலிவுட்டே பயந்து நமக்கு எதுக்குபா வம்பு என ஒதுங்கி விடுவார்கள். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் ஓபனாக பேசக்கூடியவர்.

  விவகாரமான படங்கள்

  விவகாரமான படங்கள்

  கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நேரத்தில் க்ளைமாக்ஸ், நேகட் போன்ற 18+ திரைப்படங்களை ஒடிடியில் வெளியிட்டு இளசுகளின் மனதில் இடம் பிடித்தார் ராம் கோபால் வர்மா. அப்போதே பலரும் இந்த திரைப்படத்தில் வரம்பு மீறி ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றம் சாட்டினார்கள். ஆனால், எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே எடுத்து வருகிறார்.

  டேஞ்சரஸ்

  டேஞ்சரஸ்

  இவர் வித்தியாசமாக படம் எடுக்கிறேன் என்ற சொல்லிக்கொண்டு கடந்த சில ஆண்டுகளாக விவகாரமான படங்களை எடுத்து வருகிறார். தற்போது இவர், இரு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் கதையை கையில் எடுத்துள்ளார். அந்த திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் டிசம்பர் 9ந் தேதி வெளியானது. இந்தியில் இப்படத்திற்கு டேஞ்சரஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படமாகும்.

  நடிகையின் காலுக்கு முத்தம்

  நடிகையின் காலுக்கு முத்தம்

  இந்நிலையில், டேஞ்சரஸ் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இவர்,சில தினங்களுக்கு முன் அஷு ரெட்டியின் காலை முத்தமிடும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நடிகை சேரில் அமர்ந்து இருக்க, ராம்கோபால் வர்மா காலடியில் அமர்ந்து கொண்டு, காலை பிடித்து தடவி முத்தம் கொடுத்து, பின் ஒவ்வொரு விரலாக சுவைக்கத் தொடங்கினார். இணையத்தில் வெளியான இந்த வீடியோ பலரை முகம் சுளிக்க வைத்தது.

  விளாசிய நெட்டிசன்ஸ்

  விளாசிய நெட்டிசன்ஸ்

  இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், படத்தை விளம்பரப்படுத்த எந்த எல்லைக்கும் செல்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஒரு காலத்தில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்த ராம்கோபால் வர்மா இப்படி மோசமாக நடந்து கொண்டது வருத்தத்தை அளிக்கிறது என்றும், எதிர்காலத்தில் ஸ்பா மற்றும் மசாஜ் தெரபியை தொடங்க ஐடியா ஏதாவது இருக்கிறதா என்றும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு வருகின்றனர்.

  மோசமான விளக்கம்

  மோசமான விளக்கம்

  இணையத்தில், தாறுமாறாக வரும் விமர்சனத்திற்கு ட்விட்டரில் விளக்கம் கொடுத்த ராம் கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் போட்டோவை பகிர்ந்து. நடிகை அஷு ரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்று பதிவிட்டுள்ளார்.ராம்கோபாலின் இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள் தலையில் அடித்துக்கொண்டு இப்படி ஒரு மோசமான விளக்கமா என கேட்டு நொந்து போனார்கள்.

  English summary
  Director Ram Gopal Varma reacts to trolls targeting him for kissing actress Ashu Reddy feet.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X