நான் அவன் இல்லை...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா
மும்பை : டைரக்டர் ராம் கோபால் வர்மா என்றாலே சர்ச்சை என்பது அனைவரும் அறிந்தது. சோஷியல் மீடியாவில் இவர் கருத்து பதிவிட்டாலும் சரி, இவரை பற்றிய ஃபோட்டோ வெளியே வந்தாலும் சரி, இவர் இயக்கும் படம், பேட்டி என அனைத்தும் சர்ச்சையில் சிக்குவது வழக்கம் தான்.
சமீபத்தில் கூட நடிகை ஒருவரை, ராம் கோபாலா வர்மா தொடையில் முத்தமிடுவது போன்ற ஃபோட்டோ ஒன்று வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அதிலும் இந்த ஃபோட்டோவை எடுத்ததே மற்றொரு நடிகை தான் என கூறி மற்றொரு அதிர்ச்சியையும் கொடுத்தனர்.

இதே போல் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இவர் வெளியிட்ட கருத்து, அது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டிங் ஆனது. இது பெரிய அளவில் சர்ச்சையும் ஆக்கப்பட்டது. இந்நிலையில் ராம் கோபால் வர்மா, பெண் ஒருவரை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, அவருடன் நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், அந்த பெண் பிறந்தநாள் கொண்டாடுவது போலவும், அவரின் தோள் மீது கைப்போட்டு அணைத்தபடி, அவர் கையை பிடித்து ராம் கோபால் வர்மா கேக் வெட்டுகிறார். பிறகு அந்த பெண்ணை கட்டிப்பிடித்து ராம் கோபால் வர்மா மிக நெருக்கமாக நடனமாடுகிறார். தொடர்ந்து அந்த பெண்ணின் காலிலும் விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார் ராம் கோபால் வர்மா.
இந்த வீடியோ வெளியானதும் அவர் அந்த பெண்ணிடம் நடந்து கொண்ட விதம் பற்றி நெட்டிசன்கள் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர், உங்களுக்குள் இப்படி ஒரு நடன திறமை ஒளிந்திருக்கும் என எங்களுக்கு தெரியாது என கமெண்ட் செய்தார். இதற்கு ட்விட்டரில் ராம் கோபால் வர்மா அளித்துள்ள விளக்கமும், பதிலும் அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அவர் தனது பதிலில், நான் இருப்பது போல் சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோ உலா வருகிறது. பாலாஜி, கணபதி, ஏசு இன்னும் இருக்கும் அனைத்து தெய்வங்கள் மீது சத்தியம் செய்து சொல்கிறேன். அது நான் இல்லை என தெரிவித்துள்ளார். இருந்தாலும் நெட்டிசன்கள் அவரை விடுவதாக இல்லை.
இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து ராம் கோபால் வர்மாவில் நடனத்தை பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் மிகக் கடுமையாக ராம் கோபால் வர்மாவை வறுத்தெடுத்து, விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











