»   »  ராம் ரஹீமின் இந்த வீடியோக்களை பார்த்து உங்களுக்கு ஏதாவது ஆனால் நீங்களே பொறுப்பு

ராம் ரஹீமின் இந்த வீடியோக்களை பார்த்து உங்களுக்கு ஏதாவது ஆனால் நீங்களே பொறுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சாமியார் ராம் ரஹீம் சிங் நடித்துள்ள படங்களை பார்த்தாலே மக்கள் கடுப்பாகிறார்கள்.

பெண் சீடர்கள் இரண்டு பேரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனையை நினைத்து அவர் தனது அறையில் அழுது கொண்டே இருக்கிறாராம்.

படம்

2015ம் ஆண்டு நான் ஏன் ஹீரோவாகி 1000 பேரை தூக்கிப் போட்டு மிதிக்கக் கூடாது என்று நினைத்த ராம் ரஹீம் மெசஞ்சர் ஆப் காட் படம் மூலம் நடிகரானார்.

ஹிட்

ஹிட்

மெசஞ்சர் ஆப் காட் படத்தை ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் பார்த்து பார்த்து ஹிட்டாக்கினர். படம் ரூ. 120 கோடி வசூலித்ததாக தெரிவித்தார்கள். ஆனால் இந்த வசூல் விபரத்திற்கு ஆதாரம் இல்லை.

நடிப்பு

மெசஞ்சர் ஆப் காட்(எம்.எஸ்.ஜி.) அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கு முன்பு அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டு பார்வையாளர்களின் தலையில் இடியை இறக்கினார் ராம் ரஹீம்.

சூப்பர் மேன்

சூப்பர் மேன்

ராம் ரஹீம் தனது படங்களில் வில்லன்களை அடிப்பது, மலைகளை சர்வ சாதாரணமாக உடைப்பது என்று நம்பவே முடியாத விஷயங்களை எல்லாம் எளிதில் செய்து பார்வையாளர்களை கடுப்பேத்தினார்.

மூன்றாவது படம்

இரண்டு படத்தோடு கொடுமைப்படுத்துவதை ராம் ரஹீம் நிறுத்திக் கொள்வார் என்று பார்த்தால் எம்.எஸ்.ஜி. - தி வாரியர் லயன் ஹார்ட் என்ற படத்தை வெளியிட்டு மக்களை ரத்தக் கண்ணீர் வடிக்க வைத்துவிட்டார். ட்ரெய்லரை பார்த்து வந்த தலைவலியே பலருக்கு பல நாட்களாக தீரவில்லை.

முடியல

எம்.எஸ்.ஜி. படங்களால் மக்கள் நொந்து நூடுல்ஸான நிலையில் லயன் ஹார்ட் 2 படத்தை வெளியிட்டு மேலும் கொடுமைப்படுத்தினார் ராம் ரஹீம். அவர் நடிப்பை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு தெறித்து ஓடியவர்களும் உண்டு.

ஜட்டு என்ஜினியர்

ஜட்டு என்ஜினியர் என்கிற படத்தையும் ரிலீஸ் செய்தார் ராம் ரஹீம். அவர் வெளியிட்ட படங்களை அவரது சீடர்கள் தான் பார்த்து ரசித்தனர். மற்றவர்கள் துப்பாத குறையாக கோபத்தில் கொந்தளித்தனர்.

அப்பாடா

அப்பாடா

ராம் ரஹீம் நடித்த 5 படங்களில் 3 படங்களின் இணை இயக்குனர் அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் ஆவார். ராம் ரஹீம் 20 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்பதால் இனி நடிக்கிறேன் என்று கொடுமைப்படுத்த முடியாது என்ற நம்பிக்கையில் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

English summary
Theatre goers are happy as Ram Rahim Singh cannot torture them any more in the name of acting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil