»   »  ராம் பட குழந்தை நட்சத்திரம் இப்போ ஹீரோயின்!

ராம் பட குழந்தை நட்சத்திரம் இப்போ ஹீரோயின்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : டைரக்டர் ராம் இயக்கிய முதல் படமான 'கற்றது தமிழ்' படத்தில் அஞ்சலி நடித்த ஆனந்தி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் வெண்பா.

'நெஜமாதான் சொல்றியா' எனும் டயலாக் அந்தப் படத்தின் ஸ்பெஷல். முதல் படத்தில் சிறப்பாக நடித்தவர் அதன்பின்னர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பைத் தொடர்ந்து வந்தார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வளர்ந்துவிட்ட வெண்பா இப்போது 'காதல் கசக்குதய்யா' என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

'தங்கமீன்கள்' சாதனா :

'தங்கமீன்கள்' சாதனா :

ராம் இயக்கிய தங்கமீன்கள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. அந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததால் தற்போது மம்முட்டியை வைத்து தான் இயக்கி வரும் பேரன்பு படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார் ராம். இந்தப் படத்தில் மம்முட்டியின் மகளாக சாதனா நடிக்கிறார்.

ராம் பட குழந்தை நட்சத்திரம் இப்போ ஹீரோயின்!-வீடியோ
 'காதல் கசக்குதய்யா :

'காதல் கசக்குதய்யா :

'காதல் கசக்குதய்யா' படத்தில் பள்ளி மாணவியாக, துருவாவை காதலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் வெண்பா. பெண்களை ஏமாற்றுபவர்களாகவே காட்டும் தமிழ் சினிமாவில், இந்தப் படம் பெண்களின் பார்வையிலிருந்து காதலை அணுகுமாம்.

பள்ளி பருவத்திலே :

பள்ளி பருவத்திலே :

இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் நாயகனாக நடித்து வரும் 'பள்ளி பருவத்திலே' என்ற படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார் வெண்பா. இந்தப் படத்தை வாசுதேவ் பாஸ்கர் இயக்குகிறார்.

நம்பிக்கை :

நம்பிக்கை :

இந்தப் படங்களைத் தொடர்ந்து என் திறமைக்கு சவால் விடக் கூடிய அழுத்தமான கதாநாயகி வேடங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்று கூறுகிறார் வெண்பா. இந்தப் படங்களைப் பார்த்து விட்டு நல்ல கதைகளுடன் இயக்குனர்கள் என்னை அணுகுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்கிறார்.

English summary
Venbha is the child artist of the film 'Kattradhu Tamizh' directed by director Ram. Now, She plays lead roles in new movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil