»   »  கணவருடன் சேர்ந்தவுடன் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்கு சென்ற ரம்பா

கணவருடன் சேர்ந்தவுடன் முதல் வேலையாக திருப்பதி கோவிலுக்கு சென்ற ரம்பா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் மகள்களுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆன நடிகை ரம்பா 2 பெண் குழந்தைகளுக்கு தாய்.

இந்நிலையில் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.

கோர்ட்

கோர்ட்

கணவரை பிரிந்து வந்த பிறகு அவருடன் சேர்த்து வைக்கக் கோரி ரம்பா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கணவன், மனைவியை கலந்து பேசி சமாதானமாகுமாறு கூறியது.

சமாதானம்

சமாதானம்

ரம்பாவும், கணவரும் கலந்து பேசி சமாதானம் ஆனதால் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ரம்பா பழையதை மறந்து கணவருடன் சேர்ந்துவிட்டார்.

கோவில்

கோவில்

கணவருடன் சேர்ந்த மகிழ்ச்சியில் ரம்பா குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து குடும்பத்தை சேர்த்து வைத்ததற்கு நன்றி கூறியுள்ளார்.

ரம்பா

ரம்பா

கோவிலுக்கு கணவர், மகள்களுடன் வந்த ரம்பா மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். கணவரின் கையை பிடித்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு போஸ் கொடுத்தார்.

English summary
Actress Rambha visited Triupati temple after getting re-united with businessman husband Indran Padmanathan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil