»   »  அப்பா சிரஞ்சீவிக்கு ஜோடி தேடும் மகன் ராம்சரண்

அப்பா சிரஞ்சீவிக்கு ஜோடி தேடும் மகன் ராம்சரண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்னமும் ஹீரோயின் ஃபைனல் ஆகாமல் தவிக்கிறது சிரஞ்சீவியின் 150வது படம். நம்ம விஜய் சமந்தா நடிப்பில் வெளியான கத்தி படத்தை ரீமேக்கித்தான் ரீ எண்ட்ரி தரவிருக்கிறார் சிரஞ்சீவி என்பது தெரியும். அந்த படத்துக்கு தீவிரமாக ஹீரோயின் தேடியும் யாரும் சிக்கவில்லை.

அனுஷ்காவும் நயன் தாராவும் சிலபல காரணங்களால் நடிக்க மறுக்க, அப்பாவுக்காக மகன் ராம்சரண் ஹிந்தி வரை முயன்றிருக்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. கடைசிகட்டமாக இப்போது காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம்.

Ramcharan in search for a good pair to Chiranjeevi

தெலுங்கில் ராம்சரணுடன் அதிக ஹிட் படங்களில் நடித்தவர் காஜல் அகர்வால். தனது நெருக்கமான தோழி என்பதால் அவரிடமே கோரிக்கையை வைத்திருக்கிறார் ராம்சரண். அவரோ அஜித் படத்தில் கமிட் ஆகியிருப்பதை காரணம் காட்டி மறுத்துவருகிறாராம்.

சம்பளம் கூடுதலாக கொடுத்து இழுத்துவிடுவார் ராம்சரண், ஆகஸ்ட் இறுதியில் ஷூட் போய்விடுவோம் என்று நம்பிக்கையோடு சொல்கிறது பட யூனிட். அப்பா நடிக்கும் படத்தை தயாரிக்கவிருப்பது மகன்தான். அதனால் தான் இந்த தேடுதல் வேட்டை!

English summary
Leading Telugu actor Ramcharan is searching a suitable pair to his Dad Chiranjeevi for his 150th movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil