Don't Miss!
- News
திமுக எம்.எல்.ஏக்கள் அள்ளிக் கொடுத்த 1.29 கோடி! அதிமுக எம்.எல்.ஏக்கள் மனம் இறங்காதது ஏன்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரம்யா கிருஷ்ணன் உடன் செல்ஃபி எடுத்த சோனியா அகர்வால்.. என்ன மேட்டருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!
சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் சோனியா அகர்வால் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை சோனியா அகர்வால்.
ஓடிடியில் வெளியான குயின் வெப்சீரிஸின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங்கில் தான் இவர்கள் இருவரும் இந்த செல்ஃபியை எடுத்துள்ளனர்.
ரஜினி
எதிர்பார்ப்பது
வேற...தலைவர்
169
ஷுட்டிங்
தாமதத்திற்கு
இது
தான்
காரணமா?

குயின் வெப்சீரிஸ்
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் பயோபிக்காக தலைவி படம் வெளியாகும் முன்னதாகவே எம்.எக்ஸ் பிளேயர் ஓடிடியில் கெளதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கிய குயின் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

ஜெயலலிதா பெயர் மாற்றம்
ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது பயோபிக்கை உருவாக்க பலரும் முன் வந்தனர். சிலர் மீது வழக்குகளும் தொடரப்பட்டன. உடனடியாக சக்தி சேஷாத்ரி என பெயரை மாற்றி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் குயின் வெப்சீரிஸை எடுத்து வெளியிட்டார். இதில், இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனிகா சுரேந்திரன் மற்றும் வயதான சக்தி சேஷாத்ரியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

குயின் 2
முதல் சீசன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் சீசனை விரைவில் எடுக்க ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அதற்கான பணிகளை இயக்குநர் கெளதம் மேனன் ஆரம்பித்துள்ளார். வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ள நிலையில், குயின் சீசன் 2க்கான வேலைகள் அனல் பறந்து வருகின்றன.

சோனியா செல்ஃபி
குயின் முதல் சீசனில் அனிகாவுக்கு அம்மாவாக சோனியா அகர்வால் நடித்திருப்பார். இரண்டாவது சீசனிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் ரம்யா கிருஷ்ணன் உடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். பூப்போட்ட நீல நிற சேலையில் சோனியா அகர்வாலும், காவி நிற சேலையில் ஜெ லுக்கில் ரம்யா கிருஷ்ணனும் இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

ரம்யா சம்மதிப்பாருன்னு நினைக்கல
குயின் வெப்சீரிஸை எடுக்கப் போகிறேன் என முடிவு செய்ததும், மனதுக்குள் முதலில் தோன்றியவர் ரம்யா கிருஷ்ணன் தான். அவர் முகத்தில் இருக்கும் அந்த கம்பீரம் அந்த கதாபாத்திரத்திற்கு நிச்சயம் வலிமை சேர்க்கும் என நினைத்தேன். ஆரம்பத்தில் அவர் சம்மதிப்பாருன்னு கூட நினைக்கல, அவரும் நானான்னு கேட்டார். பின்னர், ஸ்க்ரிப்ட்டை படித்தவுடன் ஓகே சொல்லி விட்டார் என முதல் சீசன் வெளியாகும் முன்னதாக கெளதம் மேனன் பேட்டி அளித்திருந்தார். கூடிய விரைவில் குயின் 2 ஓடிடியில் வெளியாக காத்திருக்கிறது.