ஆசிரியர்களை திருக்குறள் சொல்ல சொன்ன ரம்யா...தண்டனை கொடுத்த அக்ஷரா

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் எட்டாவது வாரத்திற்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்கில் பிக்பாஸ் வீடு போர்டிங் ஸ்கூலாக மாற்றப்பட்டது. இதில் போட்டியாளர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் என இரு அணிகளாக பிரிந்தனர்.

சிபி கண்டிப்பான வார்டனாகவும், ராஜு தமிழ் ஆசிரியராகவும், அமீர் டான்ஸ் மாஸ்டராகவும், அபிஷேக் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் ஆசிரியராகவும் இருந்தனர். மற்றவர்கள் குறும்புத்தனம் செய்யும் மாணவர்களாக மாறி இருந்தனர்.

விசாரித்த ரம்யா கிருஷ்ணன்

விசாரித்த ரம்யா கிருஷ்ணன்

இந்த டாஸ்கின் போது, சேட்டை செய்பவர்களுக்கு வெளியில் தூங்க வேண்டும் என தண்டனை கொடுத்தார் வார்டன் சிபி. ஓவர் கண்டிப்புடன் சிபி நடந்து கொண்டதால் சிபி - அக்ஷரா இடையே மோதல் ஏற்பட்டது. இது பற்றி நேற்றைய எபிசோடில் ரம்யா கிருஷ்ணன் விசாரித்தார். அவர் விசாரித்து பேசிய விதம் ஒரு தலைபட்சமாக இருந்ததாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

எவிக்ஷன் உண்டு

எவிக்ஷன் உண்டு

அக்ஷராவிற்கு ஆதரவாகவும், சிபியை குறிவைத்தும் ரம்யா கிருஷ்ணன் பேசியதாக கூறி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில், இன்று கண்டிப்பாக எவிக்ஷன் உண்டு என்பதை சொல்லி, வெளியேற்றப்படுபவரின் பெயர் அடங்கிய கார்டினை காட்டுவதாக இருந்தது.

திருக்குறள் டாஸ்க் கொடுத்த ரம்யா

திருக்குறள் டாஸ்க் கொடுத்த ரம்யா

இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் ரம்யா கிருஷ்ணன், திருக்குறள் இருக்கு. ஆனால் மாணவர்கள் ரிலாக்சாக இருக்கலாம். ஆசிரியர்கள் நான்கு பேருக்கும் நான் சில திருக்குறள்கள் கொடுப்பேன். அதை அவர்கள் ஐந்து நிமிடத்தில் மனப்பாடம் செய்து எனக்கு சொல்ல வேண்டும் என்கிறார். இதனால் ராஜு, சிபி, அமீர், அபிஷேக் ஆகியோர் வேகமாக கொடுக்கப்பட்ட திருக்குறளை படிக்கிறார்கள்.

தண்டனை கொடுத்த அக்ஷரா

தண்டனை கொடுத்த அக்ஷரா

பிறகு ராஜு, எனக்கு குறள் தெரியாது மேடம் என்கிறார். இதனால் ரம்யா கிருஷ்ணன், அபிஷேக்கை சொல்ல சொல்கிறார். அவரோ, இதற்கு எனக்கு தண்டனையே கொடுத்துடுங்க மேடம் என்கிறார். என்ன தண்டனை கொடுக்கலாம் என ஹவுஸ்மேட்களிடம் கேட்கிறார் ரம்யா கிருஷ்ணன். அப்போது அக்ஷரா, வீட்டிற்கு வெளியே தூங்க சொல்லுங்க. அது தான் அவர்கள் தண்டனையாக கொடுத்தார்கள் என்கிறார்.

விஷ பாட்டில் அக்ஷரா

விஷ பாட்டில் அக்ஷரா


இதை பார்த்து விட்டு ரசிகர்கள், சிபி அப்பாவி போல மூஞ்சியை வச்சிகிட்டு எல்லாம் பண்ணிகிட்டு இருக்கார். அக்ஷரா விஷ பாட்டில் என கருத்து தெரிவித்துள்ளனர். ரம்யா கிருஷ்ணன் ஒரு தலைபட்சமாக பேசுவதாக ஒரு சிலரும், அவர் சூப்பராக தொகுத்து வழங்குவதாக ஒரு சிலரும் கருத்து கூறி வருகின்றனர்.

விவாத பொருளான ரம்யா

விவாத பொருளான ரம்யா

ரம்யா கிருஷ்ணா தொகுத்து வழங்குவது எப்படி என்பது பற்றி சோஷியல் மீடியாவில் மிகப் பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. பலர் ரம்யாவை பாராட்டியும், பலர் ரம்யாவை டிரோல் செய்து கமெண்ட் பதிவிட்டு வருகிறார்கள். கமலை தொகுத்து வழங்குவதையே விரும்புவதாக பெரும்பாலானவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X