»   »  ஜெயலலிதா வேடத்தில் ”நீலாம்பரி” ரம்யா கிருஷ்ணன்?- உலா வரும் பரபரப்பு!

ஜெயலலிதா வேடத்தில் ”நீலாம்பரி” ரம்யா கிருஷ்ணன்?- உலா வரும் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாகவும், அதில் அவரது வேடத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாகவும் ஒரு பரபரப்புத் தகவல் திரை வட்டாரத்தில் உலா வருகிறதாம்.

இந்த செய்தி எந்த அளவுக்கு நம்பகமானது என்று தெரியவில்லை. ஆனால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும், மிகப் பெரிய இயக்குநர் ஒருவர் இந்தப் படத்தை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்தப் படம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் என்பதில் ஐயமில்லை.

கலந்து கட்டி அடிக்கும் கதாநாயகி:

கலந்து கட்டி அடிக்கும் கதாநாயகி:

நீண்ட நெடுங்காலமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்தியப் படங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். காதல் நாயகி, வில்லத்தனம், காமெடி என விதம் விதமான கதாபாத்திரங்களில் நடித்த சாதனையாளர்.

நீங்காமல் நினைவில் நிற்கும் நீலாம்பரி:

நீங்காமல் நினைவில் நிற்கும் நீலாம்பரி:

43 வயதான ரம்யா கிருஷ்ணனுக்கு படையப்பா படம் பெரும் பெயர் பெற்றுத் தந்தது. அதில் அவர் நடித்த நீலாம்பரி கேரக்டர் இன்று வரை பேசப்படுகிறது. அவருக்கு நிகர் அவர்தான் என்றும் பலமுறை ரம்யா நிரூபித்துள்ளார்.

வம்சம்...வம்சம்...வம்சம்:

வம்சம்...வம்சம்...வம்சம்:

இடையில் சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு டிவி சீரியல்களில் பிசியாகி விட்டார் ரம்யா. தற்போது அவர் நடித்துள்ள வம்சம் தொடர் தமிழ் சின்னத்திரையுலகில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நெடுந்தொடராகும்.

சிவகாமியாய் அசத்தல்:

சிவகாமியாய் அசத்தல்:

சமீபத்தில் வெளியாகி தேசத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்திய பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த கேரக்டர் மிகப் பிரபலமானது, பெரிய அளவில் பேசப்பட்டது. சிவகாமி என்ற பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.

ஜெயலலிதா வேடத்தில் ரம்யா?:

ஜெயலலிதா வேடத்தில் ரம்யா?:

இந்த நிலையில்தான் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படமாகப் போவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போவதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன.

விரைவில் அறிவிப்பு:

விரைவில் அறிவிப்பு:

இதுவரை இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரம்யாவும் கூட எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் விரைவில் அறிவிப்பு வெளியாகுமாம்.

English summary
After playing the role of the feisty Sivagami inBaahubali, we hear that the super-talented Ramya Krishnan is gearing up for yet another acting challenge by playing a real life character.
Please Wait while comments are loading...