»   »  பாகுபலி 2: பல்லாலத் தேவனுக்கு மனைவி கிடையாது... உண்மையை உடைத்த ராணா

பாகுபலி 2: பல்லாலத் தேவனுக்கு மனைவி கிடையாது... உண்மையை உடைத்த ராணா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தில் தனக்கு மனைவி கிடையாது என்று நடிகர் ராணா டகுபதி தெரிவித்திருக்கிறார்.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் பாகுபலி 2 உருவாகி வருகிறது.

Rana Daggubati Clarified about Bhallaladeva wife

கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிலுக்காக இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

இந்தப் படத்தில் ராணாவின் மனைவியாக லாவண்யா திரிபாதி மற்றும் ஷ்ரேயா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனல் இரண்டு நடிகைகளுமே இந்தப் படத்தில் தாங்கள் நடிக்கவில்லை என்று மறுப்புத் தெரிவித்தனர்.இந்நிலையில் தனக்கு மனைவி என்று யாரும் கிடையாது என ராணா தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ராணா " பல்லாலத் தேவனின் காதல் அரியணை மீது மட்டுமே. இந்தப் படத்தில் எனக்கு மனைவி என யாருமில்லை.கூடுதல் கதாபாத்திரம் படத்தில் இடம்பெற்றால் கண்டிப்பாக அறிவித்திருப்போம். ஏனெனில் இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

முதல் பாகத்தில் பார்த்ததை விட, இந்தப் பாகத்தில் என்னுடைய வில்லத்தனம் அதிகமாக இருக்கும். பாகுபலி 2 பார்க்கும்போது நான் சொன்னதற்கான அர்த்தம் கண்டிப்பாக உங்களுக்குப் புரியும்" இவ்வாறு தன்னுடைய கதாபாத்திரம் குறித்து ராணா தெரிவித்திருக்கிறார்.

2017 ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி பாகுபலி 2 திரைப்படம் வெளியாகவுள்ளது.

  English summary
  Baahubali 2: "No Wife for me " Actor Rana Daggubati says in Recent Interview.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil