»   »  'கபாலி மாதிரி நமக்கும் ஒரு கதை சொல்லுங்க'... ரஞ்சித்தை வளைத்த விஜய்!

'கபாலி மாதிரி நமக்கும் ஒரு கதை சொல்லுங்க'... ரஞ்சித்தை வளைத்த விஜய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிப்பில் தொடங்கி திரையுலகில் அத்தனை செயல்களிலும் ரஜினியை ஃபாலோ பண்ணுவதுதான் விஜய் பாணி.

அந்த வகையில் கபாலியின் பிரமாண்ட வெற்றியைப் பார்த்த பிறகு, அதன் இயக்குநர் பா ரஞ்சித்தை தன் பக்கம் இழுத்துள்ளார் விஜய்.

Ranjith to direct Vijay?

என்ன சம்பளம் வேண்டும் என்றாலும் தருகிறேன்... கபாலி மாதிரி ஒரு வெற்றிக் கதையை தயார் பண்ணுங்க என்று கூறி ரஞ்சித்தை அழைத்திருக்கிறார்கள் விஜய் தரப்பில்.

ரஞ்சித்தும் ஒரு அவுட்லைன் சொல்லியிருப்பதாக பரபர தகவல்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன கோடம்பாக்கத்தில்.

செய்தி எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. காரணம், சூர்யா படத்தை முடித்த பிறகு ரஞ்சித் மீண்டும் ரஜினியை இயக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள். கலைப்புலி தாணுவும் ஒரு மகிழ்ச்சி செய்தி காத்திருக்கிறது என்று கூறிக் கொண்டிருப்பதால், விஜய் - ரஞ்சித் செய்தி எந்த அளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

English summary
Kollywood sources say that Kabali director Ranjith has told a story to Vijay for his next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil