»   »  ஆளாளப்பட்ட ரஜினியே ஒன்னும் சொல்லல, இந்த சூர்யா என்னன்னா..: ரஞ்சித் காட்டம்

ஆளாளப்பட்ட ரஜினியே ஒன்னும் சொல்லல, இந்த சூர்யா என்னன்னா..: ரஞ்சித் காட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி புகழ் ரஞ்சித் அடுத்ததாக இளைய தளபதி விஜய்யை வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளாராம்.

கபாலி படத்தை பார்த்த விஜய் ரஞ்சித்தை அழைத்து தனக்கு ஒரு படம் பண்ணுமாறு கேட்டுள்ளார். ஆனால் ரஞ்சித்தோ சூர்யாவை இயக்க விரும்பினார். சூர்யாவோ ரஞ்சித்தை ஓராண்டு காத்திருக்குமாறு கூறிவிட்டு முத்தையாவுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார்.

எஸ்.3 படத்தை முடித்த பிறகு சூர்யா முத்தையா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

ரஞ்சித்

ரஞ்சித்

ரஞ்சித் சூர்யாவிடம் கதை சொல்ல அவரோ அதில் சில மாற்றங்கள் செய்யுமாறு தெரிவித்தாராம். மாற்றம் செய்யுங்கள் என்ற வார்த்தையை கேட்டதுமே ரஞ்சித்திற்கு தடுமாற்றம் வந்து சூர்யாவுக்கு குட்பை சொல்ல முடிவு செய்துவிட்டாராம்.

ரஜினியே

ரஜினியே

ஆளாளப்பட்ட ரஜினியே கபாலி படத்தில் எந்த மாற்றமும் செய்யச் சொல்லவில்லை. சில மாற்றங்களை செய்யச் சொன்ன தனது மகள் சவுந்தர்யாவையும் கட்டுப்படுத்திவிட்டார். இந்த சூர்யா இப்பவே மாற்றம் என்கிறாரே என்பது தான் ரஞ்சித்தின் ஆதங்கமாம்.

விஜய்

விஜய்

விஜய்யிடம் கால்ஷீட் வாங்கியுள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அவரை அணுகி ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறீர்களா என்று கேட்டாராம். ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருந்த விஜய் ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆரம்பம்

ஆரம்பம்

சூர்யா படத்தை இயக்க வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு விஜய் பட வேலைகளை துவங்க உள்ளாராம் ரஞ்சித். சிங்கம் போனால் என்ன தளபதி கிடைத்துவிட்டார் என்று மகிழ்ச்சியில் உள்ளாராம் ரஞ்சித்.

English summary
Ranjith has reportedly decided to direct Vijay and not Suriya as the latter wants some changes in the story.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil