Don't Miss!
- News
வெளுத்து வாங்கும் மழை.. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Sports
"அந்த ரிஸ்க்கை மட்டும் எடுக்கல.. இல்லைனா.." இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம்..ஷாக்கான பேன்ஸ்..இதுதான் வாரிசு வளர்ச்சியோ!
சென்னை : வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பளத்தை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
வாரிசு திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளதால், படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவினை தொடங்கி உள்ளனர்.
இந்த படத்தில் ராஷ்மிகா,பிரகாஷ் ராஜ், பிரபு,சரத்குமார், ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், குஷ்பு, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.
துணிவு,
வாரிசு
படத்தின்
டிக்கெட்
விலை
எவ்வளவு
தெரியுமா?
ஷாக்கான
ரசிகர்கள்
!

வாரிசு
நாகார்ஜூன்,கார்த்திக்,தமன்னா நடிப்பில் வெளியான தோழா திரைப்படத்தை இயக்கியர் வம்சி பைடிப்பள்ளி வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது. தற்போது வம்சி விஜய்யை வைத்து வாரிசு என்ற குடும்ப செண்டிமென்ட் கொண்ட கதையை உருவாக்கி உள்ளார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.

ஓகே சொன்ன விஜய்
இந்த படத்தில் இருந்து மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் கடந்த வாரம் படத்தின் டிரைலர் வெளியானது. அந்த டிரைலரில் வாரிசு பக்கா குடும்ப செண்டிமென்ட் படம் என்பது தெரியவந்துள்ளது. மெர்சல், பிகில், மாஸ்டர், பிஸ்ட் போன்ற அதிரடியான படங்களில் நடித்து வந்த விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கூட்டுக்குடும்ப கதையில் நடித்துள்ளார். இந்த கதையை வம்சி, தன்னிடம் சொன்னதுமே தனக்கு பிடித்துவிட்டதாக இசை வெளியீட்டு விழாவில் கூறியிருந்தார்.

விஜய்யின் பஞ்ச் வசனம்
இப்படத்தில் கூட்டுக்குடும்பத்தின் முக்கியத்துவத்தையும், அண்ணன் தம்பி உறவு, காதல், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் படமாக உள்ளது. அதே போல, விஜய் பேசிய பஞ்ச் வசனம், அன்போ.. அடியோ.. எனக்கு கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சு கொடு.. ஏன்னா நான் அதை விட ட்ரிப்பிளா திருப்பிக் கொடுப்பேன் என வசனத்தை விஜய் ரசிகர்களை கொண்டாடி வருகின்றனர்.

கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
வாரிசு படம் ஜனவரி 12ந் தேதி வெளியாகும் என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. ஆனால், வாரிசு படக்குழு அதிரடியாக வாரிசு படம் ஜனவரி 11ந் தேதி வெளியாகும் என அறிவித்தது. அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ஜனவரி 11ந் தேதி வெளியாக உள்ளதால், இந்த பொங்கலை அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இருவரும் தல, தளபதி பொங்கலாக கொண்டாட உள்ளனர்.

ராஷ்மிகாவின் சம்பளம்
இந்நிலையில், வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ள ராஷ்மிகாவுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள ராஷ்மிகாவுக்கு 4 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக தெலுங்கு திரைப்படங்களில் ஓவர் கவர்ச்சி காட்டும் ராஷ்மிகா இந்த படத்திலும் கவர்ச்சியை தெறிக்கவிட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.