விஜய் தேவரகொண்டாவுக்கு லிப்லாக் கிஸ் கொடுத்து நான் பட்டது போதும்… புலம்பும் விஜய் பட ஹீரோயின்!

ஐதராபாத்: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா மீண்டும் கார்த்தியுடன் ஜோடி சேரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்த பின்னர் ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் உயரத் தொடங்கியது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கு லிப்லாக் கிஸ் அடித்தது குறித்து மனம் திறந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் க்ளைமேக்ஸ்

கீதா கோவிந்தம் க்ளைமேக்ஸ்

கன்னடத்தில் 'கிரிக் பார்ட்டி' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, அதன் பின்னர் தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கினார். 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா தனது க்யூட்டான எக்ஸ்பிரஷ்ன்களால் வெரைட்டி காட்டினார். முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சியில் விஜய் தேவரகொண்டாவுக்கு லிப்லாக் கிஸ் அடித்து பயங்கரமாக ட்ரெண்டானார். இந்த லிப் லாக் கிஸ் சீன் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. கீதா கோவிந்தம் படத்தை தொடர்ந்து டியர் காம்ரேட் படத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்தார் ராஷ்மிகா மந்தனா.

பிஸி ஷெட்யூலில் ராஷ்மிகா மந்தனா

பிஸி ஷெட்யூலில் ராஷ்மிகா மந்தனா

கார்த்தியுடன் சுல்தான், அல்லு அர்ஜுனுடன் புஷ்பா படங்களில் நடித்த ராஷ்மிகா மந்தனாவின் மார்க்கெட் அநியாயத்துக்கு உயர்ந்தது. இதனால், இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் 'வரிசு' படத்தில் தளபதி விஜய்யுடன் ஜோடி சேர்ந்துளார். அதேபோல் இந்தியிலும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து 'குட்பை' படத்திலும் நடித்துள்ளார் இந்தத் திரைப்படம் இன்று (அக் 7) வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கார்த்தியுடன் 'ஜப்பான்' படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

லிப்லாக் கிஸ் குறித்து விளக்கம்

லிப்லாக் கிஸ் குறித்து விளக்கம்

இந்நிலையில், சிலதினங்களுக்கு முன்னர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த ராஷ்மிகா மந்தனா, தனது முன்னாள் காதலர்களை இப்போதும் நல்ல நண்பர்களாக பார்க்கிறேன். அவர்களின் மனைவிகளை சந்திக்கவும் எந்த தயக்கமும் இல்லை எனக் கூறியிருந்தார். அதேபோல், விஜய் தேவரகொண்டாவுடன் காதல் என பேசுவதை மகிழ்ச்சியாகவே எடுத்துக்கொள்கிறேன் என கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து இப்போது கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்களில் விஜய் தேவரகொண்டாவுக்கு கொடுத்த லிப்லாக் கிஸ் பற்றி மனம் திறந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.

ரொம்பவே அழுதுவிட்டேன்

ரொம்பவே அழுதுவிட்டேன்

குட்பை படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது வாழ்நாளில் நடந்த சோகமான நிகழ்வு பற்றி ராஷ்மிகா பேசியிருந்தார். அதில், 'டியர் காம்ரேட்' படத்தில் கதைக்கு தேவை என்பதால், விஜய் தேவரகொண்டாவுக்கு லிப்லாக் கிஸ் கொடுத்து நடித்தேன். ஆனால், படம் வெளியான பிறகு, பலர் இந்த முத்தக்காட்சியை காரணம் காட்டி என்னை இழிவாகப் பேசினார்கள். தரக்குறைவாக விமர்சித்தார்கள். அதையெல்லாம் படித்துவிட்டு மிகவும் அப்செட்டாகி படுக்கையில் அழுதபடி கிடப்பேன். அப்போதெல்லாம் விமர்சனங்களை மனதில் எடுத்துக்கொள்வேன். இப்போது எனக்குள் தைரியம் வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X