Don't Miss!
- Lifestyle
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எவராலும் செய்ய முடியாத அசாத்திய சாதனையை செய்துள்ளார்... என்ன சாதனை தெரியுமா?
- Automobiles
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஹை-டெக் ஸும் ஸ்கூட
- News
அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு- உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்
- Sports
என்னங்க சொல்றீங்க.. இந்திய வீரர் முரளி விஜய் ஓய்வு அறிவிப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன தெரியுமா??
- Finance
வினோத் அதானி நெட்வொர்க்.. அதானி குழுமத்தில் பெரும் முதலீடு.. ஹிண்டன்பர்க் கேள்விக்குப் பதில் என்ன..?
- Technology
தங்க முட்டை போடும் பாக்டீரியா.! ஜூம் செய்து பார்த்து ஆடிப்போன விஞ்ஞானிகள்.! அது Egg இல்ல.!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பேசுறவங்க என்ன வேணா பேசட்டும்.. உண்மை அவங்களுக்கு தெரியாது.. ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்த ராஷ்மிகா!
சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு எதிராக கன்னட திரையுலகமே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், தன்னை சுற்றி கிளம்பி வரும் சர்ச்சைகள் குறித்து செம ஓப்பனாக பேசிய பேட்டி டிரெண்டாகி வருகிறது.
கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, வரும் பொங்கலுக்கு விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
யானை
முதல்
குதிரை
வரை..
'வாரிசு’
விஜய்யை
இந்த
2022ல்
சுற்றிய
சர்ச்சைகள்!

ராஷ்மிகா மந்தனா
கன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம், மகேஷ் பாபுவின் சரிலேறு நீக்கெவ்வறு மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா படங்களில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் மற்றும் கோலிவுட்டிலும் டாப் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

ரக்ஷித் ஷெட்டியுடன் பிரச்சனை
கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டியின் கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கும் ரக்ஷித் ஷெட்டிக்கும் காதல் ஏற்பட்டு திருமண ஏற்பாடுகள் வரை சென்று நின்று போனது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய ராஷ்மிகா மந்தனா கிரிக் பார்ட்டியின் தயாரிப்பு நிறுவனமான ரக்ஷித் ஷெட்டியின் பரம்வா ஸ்டூடியோஸின் பெயரை சொல்லாமல் தட்டிக் கழித்தார். மேலும், காந்தாரா படத்தை அவர் பார்க்கவில்லை என கூறியது பெரும் புயலை கன்னட திரையுலகில் கிளப்பியது.

கன்னட திரையுலகம் கண்டனம்
ராஷ்மிகா மந்தனாவின் அந்த பேட்டிக்கு பிறகு அவருக்கு எதிராக சில கன்னட திரையுலகினர் போர்க்கொடி தூக்கினர். ராஷ்மிகாவை கன்னட படங்களில் நடிக்கவே தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. இந்நிலையில், அந்த பிரச்சனை தொடர்பான கேள்விக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா செய்தியாளர்களை சந்தித்த போது விளக்கம் அளித்துள்ளார்.

காந்தாரா பார்த்துட்டேன்
காந்தாரா படம் பார்க்கவில்லை என நடிகை ராஷ்மிகா மந்தனா சொன்னது தான் மீண்டும் இந்த சர்ச்சையே வெடிக்க காரணம் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதுதொடர்பாக கேட்ட கேள்விக்கு காந்தாரா படத்தை பார்த்து விட்டேன். அந்த படக்குழுவினருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். படம் வெளியான சமயத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நிலையில், பார்க்கவில்லை என்றும் விளக்கி உள்ளார்.

பேசுறவங்களுக்கு உண்மை தெரியாது
தன்னை பற்றிய ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்துள்ள ராஷ்மிகா, வாய்க்கு வந்தபடி பேசுறவங்க பேசட்டும்.. ஆனால், உண்மை அவர்களுக்கு தெரியாது. அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சினிமாவில் என் நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள் அதை திருத்திக் கொள்ள நிச்சயம் உழைப்பேன். சொந்த வாழ்க்கையை பற்றி பேசுபவர்களின் பேச்சை கண்டு கொள்ள மாட்டேன் எனக் கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

வாரிசு ஹீரோயின்
கார்த்தியின் சர்தார் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ள விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவுக்கு உள்ள நிலையில், வாரிசு படத்துக்கு அவரது நடிப்பு பெரிய பிளஸ் ஆக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. புஷ்பா 2 படத்தையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.