இந்த கொரோனா நம்மள விட்டு எப்போ போகும்.. சிறு வயது க்யூட் போட்டோவை போட்டு டிரெண்டாக்கிய ராஷ்மிகா!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா தனது க்யூட்டான சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில், அனைத்து சினிமா பிரபலங்களும் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த கொரோனா எப்போதான் நம்மள விட்டுப் போகுமோ என நடிகை ராஷ்மிகா போட்டுள்ள ட்வீட் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேஷ்னல் கிரஷ்

நேஷ்னல் கிரஷ்

பெங்களூருவை சேர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என தற்போது நேஷ்னல் கிரஷ்ஷாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

யாரு இந்த செல்லக்குட்டி

யாரு இந்த செல்லக்குட்டி

லாக்டவுன் காரணமாக கர்நாடகாவின் விராஜ்பேட்டில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைதளம் வாயிலாக உரையாடினார். இந்நிலையில், தற்போது தனது குழந்தை பருவ புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட, "யாரு இந்த செல்லக்குட்டி" என ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.

டியரஸ்ட் கொரோனா

டியரஸ்ட் கொரோனா

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த டியரஸ் கொரோனா எப்போ நம்மை விட்டு ஒரேயடியாக போகும் என காத்திருக்கிறேன் என அந்த குழந்தை போட்டோவை போட்டு ராஷ்மிகா கொடுத்துள்ள கேப்ஷன் வைரலாகி வருகிறது.

ஆர்சிபி பிடிக்கும்

ஆர்சிபி பிடிக்கும்

பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனக்கு பிடித்த ஐபிஎல் அணி விராத் கோலி தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் என ரசிகர்கள் கேட்ட கேள்வியின் போது பதில் அளித்திருந்தார்.

தல தோனி

தல தோனி

கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியின் தாக்கம் இன்னமும் ரசிகர்களை விட்டு நீங்கவில்லை. ஐபிஎல் அணியை தொடர்ந்து உங்களுக்கு பிடித்த பிளேயர் யார்? என்கிற கேள்விக்கு உடனடியாக தல தோனி தான் எனக் கூறி சென்னை ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் ராஷ்மிகா.

தமிழ்நாட்டு மருமகள்

தமிழ்நாட்டு மருமகள்

நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழ் கலாச்சாரம் மிகவும் பிடித்துப் போயுள்ளதாம். முக்கியமாக தமிழ்நாட்டு உணவுக்கு பயங்கர ஃபேன் ஆகிவிட்டார் ராஷ்மிகா. மேலும், கல்யாணம் பண்ணிக்கிட்டா தமிழ்நாட்டுப் பையனத்தான் கட்டிப்பேன்னும் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

பிசியான நடிகை

பிசியான நடிகை

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ராவுடன் இணைந்து மிஷன் மஜ்னு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், நடிகர் அமிதாப் பச்சனின் குட்பை படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், சர்வானந்த் நடிக்கும் ஆடல்லு மீக்கு ஜுவர்லு எனும் தெலுங்கு படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால், கொரோனா காரணமாக எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X