மண்டையில் இருந்த கொண்டையை மறந்துட்டேனே..ஒரே கண்ணாடி..ரசிகர்களிடம் சிக்கிய ராஷ்மிகா!

சென்னை : நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்றிருப்பதாக தகவல் பரவிவரும் நிலையில், விஜய் தேவரகொண்டாவின் கண்ணாடியை ராஷ்மிகாவும் போட்டு ரசிகர்களிடம் கொத்தாக மாட்டிக்கொண்டார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும், குஷி என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக இடைவிடாமல் நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்து சற்று ஓய்வெடுப்பதற்காக விஜய் தேவரகொண்டாவும் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

அதேபோல குட்பை,வாரிசு படங்களில் பஸியாக நடித்து வந்த ராஷ்மிகாவும் மாலத்தீவுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார்.

கீதா கோவிந்தம்

கீதா கோவிந்தம்

கீதா கோவிந்தம் படத்தில் க்யூட்டாக நடித்து அனைவர் மனதிலும் பஜக்கென்று ஒட்டிக்கொண்டார் ராஷ்மிகா மந்தானா. அந்த படத்தில் விஜய்தேவர கொண்டாவுடன் காதல், ரொமான்ஸ் என அனைத்தும் பக்காவாக இருக்கும். இந்த படத்தை அடுத்து டியர் காம்ரேட் படத்தில் இருவரும் ஜோடி போட்டு நடித்தனர். ரியல் காதலர்கள் போல இருவரும் செம பொருத்தமாக இருந்ததால் இந்த ஜோடியை அனைவருக்கும் பிடித்து விட்டது.

காதல் கிசுகிசு

காதல் கிசுகிசு

இரண்டு படங்களுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்றாலும் இருவரும் டேட்டிங் செல்வது, ஊர் சுற்றுவதுமாக இருந்ததால், மீடியாக்களின் கண்களில் சிக்கினர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், நாங்கள் இருவரும் நண்பர்கள் தான், காதலர்கள் இல்லை என கூறி வருகின்றனர்.

மாலத்தீவில்

மாலத்தீவில்

இந்த ஜோடி தற்போது மாலத்தீவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னத்தான் தனித்தனி காரில் வந்தாலும், மாலத்தீவு செல்லும் விமானத்தில் ஒன்றாகத்தான் ஏறியதால் கேமிராவில் வசமாக சிக்கிக்கொண்டனர். இதனால், இவர்களைப் பற்றிய காதல் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகி உள்ளது.

வசமாக சிக்கிய ராஷ்மிகா

வசமாக சிக்கிய ராஷ்மிகா

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் கூலர் கண்ணாடியை, ராஷ்மிகா மந்தனா போட்டுக்கொண்டு இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இதைப்பார்த்த, ரசிகர்கள் மும்பை விமானநிலையத்திற்கு விஜய்தேவரகொண்டா கூலர் போட்டு வரும் போட்டோவையும்,ராஷ்மிகா கூலர் போட்டு இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்து கண்ணாடி விஜய்க்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்துவிட்டனர். மண்டையில் இருந்த கொண்டைய மறந்துடீங்களே என இருவரையும் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X