மனைவியைப் பிரிந்த பின்னர் ரவி மோகனுக்கு முதல் பிறந்த நாள்.. அந்த விஷயத்தை அதிகாரப்பூர்வமாகவே சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் ரவி மோகன் இன்று அதாவது செப்டம்பர் 10ஆம் தேதி தனது, 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இப்படி இருக்கும்போது அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவரது, இந்த பிறந்த நாள் என்பது கடந்த 20 வருடமாக அவர் கொண்டாடிய பிறந்த நாளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
கடந்த 22 ஆண்டுகளாக ரவி மோகன் நடிகராகத்தான் தனது பிறந்தநாளை தமிழ் சினிமாவில் கொண்டாடிக் கொண்டு இருந்தார். ஆனால் இந்த பிறந்த நாளை ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள தயாரிப்பாளராகவும், நடிகர் யோகி பாபுவை கதாநாயகனாக கொண்டு படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமாகவுள்ள இயக்குநராகவும் இந்த பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதைக் கடந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்றால் அது, தனது காதல் மனைவி ஆர்த்தியைப் பிரிந்து ரவி மோகன் கொண்டாடும் முதல் பிறந்த நாள். கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டுப் பிரிவதாகவும், விவாகரத்து கோர உள்ளதாகவும் அறிவித்துவிட்டு அவரது திருமண உறவில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் நடைபெற்றவை தனிக்கதை.

ரவி மோகன் ஒரு கதாநாயகனாக தமிழ் சினிமாவில் மென்மேலும் உயர்ந்து கொண்டே இருக்கிறார். காதல் கதாநாயகனாக, ஆக்ஷன் கதாநாயகனாக, ஜனரஞ்சகமான கதைகளுக்கு ஏற்ற நடிகராக ரவி மோகன் எப்போதும் தன்னை தயார்படுத்திக் கொண்டே இருந்துள்ளார். கோமாளி படத்திற்காக உடல் எடையைக் குறைக்கவும், பூமி படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவும் செய்தது எல்லாம் நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை பிரதிபலிக்கக்கூடிய மெனக்கெடல்கள்.
வில்லன் ரவி மோகன்: ரவி மோகனுக்கு தமிழில் மட்டும் இல்லாமல் தென்னிந்தியாவில் நல்ல ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். குறிப்பாக தமிழைக் கடந்து தெலுங்கில் அவருக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அவரது நடிப்பில் தற்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ள படம் என்றால் அது கராத்தே பாபு படம் தான். இந்த படத்தில் அரசியல்வாதியாக ரவி மோகன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வில்லனாக தற்போது பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இயக்குநர் அவதாரம்: இந்நிலையில் ரவி மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள முதல் படமான யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். An Ordinary Man என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ப்ரோமோ, ரவி மோகனின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 06.06 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ரசிகர்கள் ரவி மோகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளோடு, அவரது படத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல், ஏற்கனவே ரவி மோகன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் ப்ரோ கோட் படத்தின் ப்ரோமோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படி இருக்கையில், இந்த படத்தின் ப்ரோமோவும் தரமாக இருக்கும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











