Ravi Mohan: EMI பெண்டிங்.. ஜப்தி ஆகும் ரவி மோகனின் சொகுசு பங்களா? வீட்டுக்கே நோட்டீஸ் அனுப்பிய வங்கி

சென்னை: எப்போது தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்தாரோ அதில் இருந்து மாதம் ஒருமுறையாவது ஊடகச் செய்திகளில் அடிபட்டு விடுகிறார் நடிகர் ரவி மோகன். பாடகியும் அவரது தோழியுமான கெனிஷா உடன் அவர் அவ்வப்போது வெளியே செல்வது தொடர்பான புகைப்படங்கள் டிரெண்டாகி வருகிறது. இப்படி இருக்கும்போது ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களா சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ளது. அந்த பங்களாவை வங்கியில் கடன் வாங்கி வாங்கியுள்ளார் போலத் தெரிகிறது. இப்படி இருக்கும்போது கடந்த 10 மாதங்களாக அந்த பங்களாவுக்கு தவணை செலுத்தாததால், வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் ரவி என மக்களால் அறியப்பட்ட இவர், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியை விட்டு விலகிய பின்னர் ரவி மோகன் என தனது பெயரை மாற்றி வைத்துக் கொண்டார். இவரது நடிப்பில் அடுத்து கராத்தே பாபு, ஜீன் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இந்த இரண்டு படங்களின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக கராத்தே பாபு என்ற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Ravi Mohan Not Paid 10 Month EMI For ECR luxury Banglow Bank Plans To Confiscation
Photo Credit:

விவாகரத்து: ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அறிவித்தார். தற்போது இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் குழந்தைகள் ஆர்த்தி ரவியுடன் உள்ளார்கள். ரவி மோகன் தற்போது தனது தோழியும் பாடகியுமான கெனிஷா உடன் அடிக்கடி அவுட்டிங் செல்வது தொடர்பான புகைப்படங்களை அவர்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அண்மையில் கூட இலங்கைக்குச் சென்றிருந்தார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

ஜப்தி: தற்போது ரவி மோகன் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ரவி மோகனுக்கு சொந்தமான சொகுசு பங்களா சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ளது. அந்த பங்களாவை வங்கியில் கடன் வாங்கி வாங்கியுள்ளார் போலத் தெரிகிறது. இப்படி இருக்கும்போது கடந்த 10 மாதங்களாக அந்த பங்களாவுக்கு தவணை செலுத்தாததால், வங்கி தரப்பில் இருந்து ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ரவி மோகன் தரப்பில் அந்த நோட்டீஸைப் பெற்றுக் கொள்ளாமல், வங்கியில் வந்து நேரடியாகவே பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.

Ravi Mohan Not Paid 10 Month EMI For ECR luxury Banglow Bank Plans To Confiscation
Photo Credit:

ரசிகர்கள் ஷாக்: இப்போது இந்த தகவல் இணையத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது. தகவலைக் கேள்விப்பட்ட ரசிகர்கள், நமக்குத்தான் மாதாமாதம் பல இ.எம்.ஐக்கள் இருக்கிறது என்று பார்த்தால், கோடிகளில் சம்பளம் வாங்கும் ரவி மோகனுக்கும் இ.எம்.ஐ இருக்கிறதே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X