»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்த் திரைபபட தயாரிப்பாளர்கள் சங்கம் விடுத்த பலகோரிக்கைகளை நடிகர் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடிகர்,நடிகைகளுக்கு 6 கோரிக்கைகள் விடுத்தனர். தவணை முறையில்சம்பளம் பெற்றுக்கொள்ள வேண்டும், படப்பிடிப்பு நேரத்தில்செல் போன்கள் பயன்படுத்தக்கூடாது, உடன் அழைத்துவரும்உதவியாளர்களுக்கு நடிகர்-நடிகைகளே சம்பளம் கொடுக்கவேண்டும் போன்றவை அதில் முக்கிய கோரிக்கைகள் ஆகும்.

இது தொடர்பாக பேசி முடிவெடுக்க நடிகர் சங்கத்தில்ஞாயிற்றுக்கிழமை நடிகர், நடிகைகள் கூட்டம் நடைபெற்றது.சங்கத் தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் சரத்குமார், உப தலைவர் எஸ்.எஸ்.சந்திரன்முன்னிலை வகித்தனர்.

3 மணி நேரம் கூட்டம் நடந்தது. அதன் பிறகுபத்திரிகையாளர்களை நடிகர் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர்சந்தித்தனர்.

இருவரும் கூறுகையில், நடிகர் சங்கத்தின் அழைப்பை ஏற்றுஎல்லா நடிகர் - நடிகைகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.தயாரிப்பாளர்கள் விடுத்திருந்த கோரிக்கைகள் பற்றி எல்லோரும்தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதன் பிறகு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் இது தான்: தயாரிப்புச் செலவைக் குறைக்க என்னென்னசெய்ய வேண்டுமோ அதனை தயாரிப்பாளர்களுடன் கருத்துஒற்றுமை அடிப்படையில் நடிகர்- நடிகைகள் கைகோர்த்து செய்துகொடுக்க தயாராக உள்ளனர்.

இதர செலவினங்களை குறைத்துக்கொள்ள வேண்டும்.தங்களுடன் வரும் உதவியாளர்களுக்கு நடிகர், நடிகைகளேசம்பளம் கொடுக்க வேண்டும் என்று பட அதிபர்கள்கேட்டுள்ளனர். அவர்களது கோரிக்கைகளுக்கு கட்டுப்படும்நடிகர், நடிகைகளை மட்டும் ஒப்பந்தம் செய்து அவர்கள் படம்தயாரித்துக் கொள்ளலாம்.

ஒரு படத்தில் ஒரு நடிகருக்கு எவ்வளவு சம்பளம்கொடுக்கப்படுகிறது என்பதை ஒப்பந்தம் மூலம் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு நடிகர், நடிகைகள் வரத்தயாராக இருக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பை நீடித்து,கொடுத்த கால்ஷீட்டை விட அதிக நேரம் நடித்துக் கொடுக்கவேண்டி உள்ளது. எனவே, இனிமேல் காலை 9.00 மணிமுதல்இரவு 9.00 மணிவரை நடிகர், நடிகைகள் கால்ஷீட் நேரத்தில்நடித்துக்கொடுப்பார்கள்.

நடிகைகள் அதிக விலையுள்ள நகைகள், சேலைகள்கேட்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு நடிகைகள்அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஒரு காட்சிக்கு என்ன உடை? என்ன நகை? அணிவது என்பதைநடிகைகள் தீர்மானிப்பதில்லை. அதை படத்தின் இயக்குனர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். இயக்குனர் என்ன சொல்கிறாரோஅதற்கேற்ப நகை, உடை அணிய நாங்கள் அணியத் தயார் என்றுநிடிகைகள் கூறியுள்ளனர்.

பெட்ரோல் செலவு கேட்கக்கூடாது என்பதை நடிகர்கள்ஏற்றுக்கொள்கிறார்கள். எந்த நடிகர் பெட்ரோல் செலவுக்கு பணம்கேட்கிறாரோ அந்த நடிகரை அழைத்து வர குறிப்பிட்ட படநிறுவனத்திலிருந்து கார் அனுப்பினால் போதும். அந்த ஏற்பாடுசெய்தால் நடிகர், நடிகைகள் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்குவருவார்கள்.

சம்பளத்தில் பத்து சதவீதம் மட்டுமே முன்பணம் ( அட் வான்ஸ்)பெற்றுக்கொள்ள வேண்டும். மீதமுள்ள பணத்தை படப்பிடிப்புநிடக்கும் பொழுது நிாற்பது சதவீதமாகவும், முதல் பிரதி எடுத்துமுடித்த பிறகு ஐம்பது சதவீதம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றுபட அதிபர்கள் கோரி உள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்கமுடியாது.

நடிகர், நடிகைகளுக்கு பேசப்படும் சம்பளத்தை படத்தின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிவதற்குள் கொடுத்து விட வேண்டும்.

ஒரு நடிகருக்கு முன் பணம் கொடுத்துவிட்டு அந்த பணத்தைதிரும்பி கேட்கக்கூடாது. அப்படி கேட்டால் அதை நடிகரோ,நடிகையோ தர முடியாது. எந்தப் படத்திற்காக முன் பணம்வாங்கினார்களோ அந்தப் படத்தில் நடிகர், நடிகைகள்நடித்துக்கொடுப்பார்கள்.

ஒரு படத்தில் ஒரு நடிகரையோ, நடிகையையோ ஒப்பந்தம்செய்த பிறகு ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த நடிகையைஅல்லது நடிகரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு வேறு நடிகர்,நடிகையை ஒப்பந்தம் செய்ய நினைத்தால் முதலில் எந்த நடிகர்,நடிகை நடித்தாரோ அவர்களிடமிருந்து மறுப்பில்லை என்றுசான்றிதழ் பெற வேண்டும்.

படப்பிடிப்பு நேரத்தில் செல்போனுக்குத் தடை:

படப்பிடிப்பு நேரத்தில் நடிகர், நடிகையர் செல் போன்களைப்பயன்படுத்த மாட்டார்கள். ஒரு படத்தை முடித்த பின், அந்தபடத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பு நடிகர் சங்கத்திடமிருந்துபடத்தயாரிப்பாளர் ஒப்புதல் சான்றிதழ் பெற வேண்டும் என்றுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று நடிகர்விஜயகாந்தும், சரத்குமாரும் தெரிவித்தனர்.

தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட கோரிக்கைகள்பலவற்றை நடிகர் சங்கத்தினர் ஏற்றுக் கொண்டாலும், ஒரு சிலகோரிக்கைகளை மறுத்துள்ளனர்.

நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிதிங்கள்கிழமை தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் மறுஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.

Read more about: actors producers tamilnadu cinema

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil