யாஷ் கைகளில் துப்பாக்கி… தெறிக்கும் தோட்டாக்கள்… அடேங்கப்பா இவரு நெஜமாவே டான் தான் போல!

லாஸ் ஏஞ்சல்ஸ்: கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் யாஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் கேஜிஎஃப் 2 வெளியானது.

முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் சூப்பர் ஹிட் அடித்தது யாஷின் கேஜிஎஃப் திரைப்படம்.

கன்னட மாஸ் ஹீரோ யாஷ், ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டருடன் தரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சீரியலில் இருந்து சினிமா

சீரியலில் இருந்து சினிமா

நம்மூர் சிவகார்த்திகேயனைப் போல சின்ன திரையில் இருந்து வந்து வெள்ளி திரையில் வெற்றிக் கொடி நாட்டியவர் கன்னட நடிகர் யாஷ். ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து வந்த யாஷ்க்கு, சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் குறையவே இல்லை. அதே வேட்கையில் போராடிய யாஷ், 2007ம் ஆண்டு ஜம்பட ஹுடுகி படம் மூலம் சினிமாவில் ஹீரோவானார். சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த யாஷ், தமிழில் வெற்றி பெற்ற களவாணி படத்தின் கன்னட ரீமேக்கிலும் விமல் ரோலில் நடித்திருந்தார்.

ராக்கி பாய் கொடுத்த கம்பேக்

ராக்கி பாய் கொடுத்த கம்பேக்

கன்னடத்தில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்த யாஷ், திடீரென பான் இந்தியா ஸ்டாராக விஸ்வரூபமெடுத்தார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ல் வெளியான கேஜிஎஃப் திரைப்படம் யாஷை உச்சத்தில் கொண்டு வைத்தது. ராக்கி பாய் என்ற டானாக ஆக்சனில் அதிரடி காட்டிய யாஷ், பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கேஜிஎஃப் செகண்ட் பார்ட்டும் சொல்லி அடித்தது.

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டருடன் யாஷ்

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டருடன் யாஷ்

கேஜிஎஃப் செகண்ட் பார்ட் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டிய நிலையில், விரைவில் மூன்றாம் பாகமும் உருவாகும் என இயக்குநர் பிரசாந்த் நீல் தெரிவித்துள்ளார். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அடுத்து ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், நடிகர் யாஷ் லாஸ் ஏஞ்சல்ஸில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெ பெர்ரியுடன் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சுட்டுத் தள்ளிய ராக்கி பாய்

சுட்டுத் தள்ளிய ராக்கி பாய்

இந்த வீடியோவில், கையில் Kalashnikov ரக துப்பாக்கியுடன் இருக்கும் யாஷ், அங்கு பயிற்சிக்காக வைக்கப்பட்டுள்ள சிமெண்டு பொம்மைகளை சுட்டுத் தள்ளுகிறார். வச்ச குறி தப்பாமல் யாஷின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டுகள், துல்லியமாக டார்க்கெட்டை அடித்து நொறுக்குகின்றன. யாஷ் தனது ட்விட்டரில் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளதுடன், "இலக்கை அடைய எப்போதும் ஒரு வழி இருக்கும், அதை கண்டுபிடிப்பது தான் சவால். ஜெ பெர்ரி மிக்க நன்றி, இது சிறப்பான நாள்" என கேப்ஷன் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X