»   »  ஆபாசம்… வன்முறை ஜாஸ்தியாம்… அதனால்தான் ‘புலி’க்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டதாம்!

ஆபாசம்… வன்முறை ஜாஸ்தியாம்… அதனால்தான் ‘புலி’க்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டதாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தில் மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை. அதிகமான வன்முறை காட்சிகள் உள்ளது எனவேதான் வரிச்சலுகை மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Select City
Buy Chiruthai Puli (U/A) Tickets

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் அக்டோபர் 1ம் தேதி வெளியாகி இருக்கும் படம் 'புலி'. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகி இருக்கும் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


இப்படத்துக்கு வரிச்சலுகை அளிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். அதற்கான காரணம் என்ன என்பது வெளியாகாமல் இருந்தது.


'புலி' படத்துக்கான வரிச்சலுகைக்கான காட்சியை சி.பழனி, ம.சி.தியாகராஜன், முனைவர் கா.மு.சேகர், டி.ஐ.மகாராஜன், ஏ.ஐ.ராகவன் மற்றும் எம்.என்.ராஜம் ஆகியோர் பார்த்திருக்கிறார்கள். ஏன் வரிச்சலுகை அளிக்கவில்லை என்பதற்காக அவர்கள் கூறியிருக்கும் காரணங்கள்.


மூட நம்பிக்கைகள்

மூட நம்பிக்கைகள்

திரைப்படத்தில் மூட நம்பிக்கைகளை உண்மையாக காட்டப்படும் காட்சிகள் தமிழ் பண்பாட்டிற்கு உகந்ததாக இல்லை. திரைப்படத்தில் வன்முறை காட்சிகள் உள்ளன.


ஆபாசம் அதிகம்

ஆபாசம் அதிகம்

படத்தின் பாடல் காட்சியில் மகளிரின் ஆடைகள் ஆபாச காட்சிகளாக சில இடங்களில் அமைந்துள்ளன.


கொலைகள்

கொலைகள்

படத்தில் குழந்தையின் கழுத்து அறுபடுவது, சண்டைக் காட்சியில் வன்முறை, கொலைக்காட்சிகள் நேரிடையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


வன்முறை அதிகம்

வன்முறை அதிகம்

திரைப்படம் முழுக்க வன்முறை அதிகரித்துள்ளது. மனித உயிர்களுக்கு மதிப்பளிக்கவில்லை. குழந்தைகளையும், பெண்களையும் வெட்டிக் கொல்லுவது ஏற்புடையதாக இல்லை.


இரட்டை அர்த்த வசனம்

இரட்டை அர்த்த வசனம்

ஆரம்பித்திலே இரட்டை அர்த்த வசனங்கள், 12 வயது குழந்தை கழுத்து வெட்டப்படுவதாக காட்டப்படுகிறது. மேலும், படம் முழுவதும் மூட நம்பிக்கைக்கு உயிர் ஊட்ட முளைத்திருப்பதால் வரி விலக்கிற்கு தகுதியானது அல்ல.


வரி விலக்கு மறுப்பு

வரி விலக்கு மறுப்பு

படத்தை பார்வையிட்ட அதிகாரிகள் அனைவருமே ஆபாசம் மற்றும் வன்முறைக் காட்சிகளை மேற்கோள்காட்டி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.


English summary
Vijay's 'Puli' did not get the Tamil Nadu Government's Entertainment Tax Exemption which means 30% of the revenue generated by the film should be paid to the Government as Tax.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil