எனக்கு நமிதாவ ரொம்ப பிடிக்கும்.. காரணம் சொல்லும் சரத்குமார்.. பக்கத்துல இவங்கள வச்சுக்கிட்டேவா?

சென்னை: 80களில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நடிகர் சரத்குமார், ஆரம்பத்தில் துணை கதாபாத்திரத்திலேயே நடித்து வந்தார்.

அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பிரபு, கார்த்திக், விஜயகாந்த் போன்றவர்களின் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

துணை நடிகராக இவர் நடித்த பல படங்கள் ஹிட் கொடுத்த நிலையில், இவர் நடித்த சூரியன் திரைப்படம் மெகா ஹிட்டாக அமைந்தது. தற்போது நடிகர் சரத்குமார் தனக்கு பிடித்த நடிகை நமிதா தான் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

 துணை நடிகர்

துணை நடிகர்

80களில் இருந்து துணை நடிகராக இருந்த சரத்குமார், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு இவர் நடித்த நட்சத்திர நாயகன் படத்தின் வெற்றி காரணமாக ரசிகர்கள் இவரை சூப்பர் ஹீரோ என்று அழைக்க தொடங்கினர். கட்டபொம்மன், அரண்மனை காவலன், நம்ம அண்ணாச்சி, போன்ற பல படங்கள் தொடர்ந்து ஹிட் ஆனது. அதன் பிறகு பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது தான் நாட்டாமை. இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கே எஸ் ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை திரைப்படத்தில் மீனா, குஷ்பு போன்ற பலரும் நடித்திருந்தனர்.

 கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

கேப்டன், கூலி, நாடோடி மன்னன், ரகசிய போலீஸ், சூரியவம்சம், நட்புக்காக, என்று இவரது ஹெட் லிஸ்ட் அதிகம். ரகசிய போலீஸ் படத்தின் மூலம் இவரை சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் நட்புக்காக, சிம்மராசி, பாட்டாளி, மாயி, சமுத்திரம், அரசு போன்ற பல படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். 80களில் தொடங்கி இன்று வரை தனக்கென ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார் நடிகர் சரத்குமார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கு ஏற்றவாறு நடித்து ஹிட் கொடுப்பதில் வல்லவர்.

 நமிதா தான் பிடிக்கும்

நமிதா தான் பிடிக்கும்

பல நடிகைகள் தன்னுடன் நடித்திருந்தாலும் தனக்கு நமிதாவை மிகவும் பிடிக்கும் என்று இவர் கூறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் தனக்கு ஏன் நமிதாவை பிடிக்கும் என்ற காரணத்தையும் நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். நடிகர் சரத்குமார் 2001 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. நடிகை ராதிகாவை தவிர உங்களுக்கு எந்த நடிகையை மிகவும் பிடிக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், நடிகர் சரத்குமார் கொஞ்சமும் தயங்காமல் நமிதா என்று பதிலளித்துள்ளார்.

Recommended Video

இந்த பக்கம் ஜனனி, இந்த பக்கம் ஐஸ்வர்யா | Ashok கலகல Speech | Vezham *Kollywood | Filmibeat Tamil
 மீனாவையும் பிடிக்கும்

மீனாவையும் பிடிக்கும்

நடிகை ராதிகா, இவருக்கு மீனா, நமிதா இருவரையும் பிடிக்கும் என்று கூறினாலும், எனக்கு அனைவரையும் விட நமிதா தான் பிடிக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," நமிதா ரொம்ப நல்ல பர்சன், நமிதா தன் திருமணத்திற்கு என்னை நேரில் வந்து அழைத்தார், திருமணத்திற்கு திருப்பதிக்கு சென்று இருந்தேன். திருமண மேடையில் நின்று கொண்டிருந்த அவர்," நான் வருவதை கவனித்து இறங்கி வந்து என் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார், அவர் அப்படி செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை, ஆனால் அந்த இடத்தில் அவர் அப்படி செய்தது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. இந்த விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது என்று கூறியுள்ளார். நமிதா என்னை எந்த அளவுக்கு மதிக்கிறார் என்பதை நான் அப்போது உணர்ந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் சரத்குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X