Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பூவே உனக்காக படம் ஒரு வருஷம் ஓட வேண்டியது ஆனா ஓடல... காரணம் இதுதான்!
சென்னை: விஜய்க்கு திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பூவே உனக்காக
இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் வெளியான பூவே உனக்காக 1996ஆம் ஆண்டு வெளியாகி பட்டையை கிளப்பியது
கிட்டத்தட்ட 270 நாட்களுக்கு மேல் ஓடிய பூவே உனக்காக ஒரு வருடம் ஓடாமல் போனதற்கான காரணத்தை விக்ரமன் தெரிவித்துள்ளார்
10
ஆண்டுகளுக்கு
பிறகு
விஜய்
பேட்டி....
சில
மணிநேரங்களில்
10
லட்சம்
வியூஸ்களை
தாண்டிய
ப்ரமோ!

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை
மிகப் பெரிய திரை குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் நடிகர் விஜய்க்கு ஆரம்பகால திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி படங்களாக அமையவில்லை. இந்த நிலையில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 1996 ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கீதா நடித்திருப்பார். மூத்த நடிகர்கள் நாகேஷ், நம்பியார் மலேசியா வாசுதேவன், சார்லி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து இருப்பார்கள். எஸ் ஏ ராஜ்குமார் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பார் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் உண்மையான காதலையும் ஆழமாக பேசிய பூவே உனக்காக அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது

மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது
விஜய்யின் திரை வாழ்க்கையிலேயே முதல் பிரமாண்ட வெற்றிப் படமாக அமைந்த பூவே உனக்காக விஜய்க்கு மட்டுமல்லாமல் விக்ரமனுக்கும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்று சொல்லலாம். புது வசந்தம் , நான் பேச நினைப்பதெல்லாம், கோகுலம் ,புதிய மன்னர்கள் என தொடர் வெற்றி படங்களை இயக்கி வந்த விக்ரமனுக்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது பூவே உனக்காக.

ஹவுஸ்புல் காட்சிகளாக
பூவே உனக்காக திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது கிட்டத்தட்ட 270 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த படம் ஒரு வருடத்தை எட்டும் என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் எட்ட இருந்த இந்தப் படம் ஓடாததற்கான காரணத்தை விக்ரமன் பகிர்ந்துள்ளார் .

ஓராண்டு ஓட வேண்டிய படம்
1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த சமயத்தில் தீபாவளி வந்ததால் அந்த சமயத்தில் புது படங்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதனால் ஓராண்டு ஓட வேண்டிய பூவே உனக்காக 270 நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. இல்லையென்றால் நிச்சயமாக ஒராண்டு வெற்றிகரமாக ஓடி இருக்கும் என இயக்குனர் விக்ரமன் தெரிவித்துள்ளார்.