For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலாஜி முருகதாஸை எலிமினேட் பண்ணுங்க.. டிரெண்டாகும் #RedCardForBalaji.. என்ன செய்யப் போகிறார் கமல்?

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸ் நேற்று கத்திய கத்துக்கு அவரை பிக் பாஸ் வீட்டில் இனியும் வைத்திருக்கக் கூடாது என்றும் உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் கொதித்து வருகின்றனர்.

  #RedCardForBalaji என்ற ஹாஷ்டேக்கை 16 ஆயிரம் பேருக்கும் மேல் ட்வீட் செய்து சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  மைக்கை உடைத்தது, தலையணை தூக்கி அடித்தது, ஆரியிடம் அடிப்பது போல எகிறியது, ஆரி மன்னிப்பு கேட்ட பிறகும் கேட்கவில்லை என பொய் சொன்னது என ஏகப்பட்ட கிரைம் ரேட் பாலாஜி மீது குவிந்துள்ளது.

  ஆரியோட என்ன பிரச்சனை.. பாலா, ரியோ, ரம்யாவுக்கு கமல் விரித்த வலை.. சம்பவம் லோடிங் போல!

  ’சோம்பேறி’ குறும்படம்

  பாலாஜி முருகதாஸை பார்த்து ஆரி சோம்பேறி என சொன்னதை பிடித்துக் கொண்டு பாலாஜி கிளப்பிய பிரச்சனை கண்ணாடி அறைக்குள்ளும் பூதாகரமாக வெடித்தது. அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன், மன்னிச்சிடு என பாலா அவ்வளவு கத்தி பேசிய போதும் ஆரி அமைதியாக மன்னிப்பு கேட்டும் மன்னிப்பு கேட்கவில்லை என மீண்டும் பொய் சொல்லும் பாலாவுக்கு இதோ குறும்படம் என ரசிகர்கள் கமலுக்கு முன்பாகவே குறும்படம் போட்டு வருகின்றனர்.

  மெஷின் ரம்யா

  ஆரியை பற்றிய விவாதங்கள் வரும் போது மட்டுமே இந்த மெஷின் வாய் திறக்கும், அதுவும் ஆரிக்கு எதிராக, பாலா அவ்வளவு கத்தி பேசும் போது, வந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பார். ஆரி எதிர்த்து பேசினால் அவரை எதிர்த்து பேசுவார். சோம், ஷிவானி, கேபி, ஆஜீத் எல்லாம் இதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைன்னு மிக்சர் தின்னுட்டு இருப்பாங்க என கலாய்த்து வருகின்றனர்.

  ஒன் மேன் ஆர்மி

  ஓநாய் கூட்டமாக வந்த போதும், எதிரிகள் எல்லா பக்கங்களில் இருந்து தாக்கும் போதும், அவர்களிடம் விவாதம் மட்டுமே செய்யும் சிங்கமாக ஆரி இருப்பதை பார்த்து அவருக்குத் தான் டைட்டில் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் பார்க்கும் முக்கால்வாசி ரசிகர்கள் ஆரிக்கு தான் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

  நீங்க யார் பக்கம்?

  24 வயதில் பாலாஜி முருகதாஸ், குடியும் கும்மாளமுமாகத்தான் இருந்தார் என்றும், கார் விபத்து, காதல் லீலைகள் என சுற்றித் திரிந்து விட்டு, ஆரி பண்ணதை விட அதிகமாக பண்ணி கிழிச்சிட்டேன் என கத்துவதை வச்சு விளாசி வருகின்றனர் நெட்டிசன்ஸ். ஆரி அதே நேரம் கின்னஸ் சாதனை, மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வது என கலக்கி வருகிறார் என புகழ்கின்றனர்.

  சனம் இருந்திருந்தால்

  இந்நேரம் இங்கே சனம் ஷெட்டி மட்டும் இருந்திருந்தால், நிச்சயம் ஆரிக்கு ஆதரவாக ஒரு குரலாவது பேசியிருக்கும். ரியோ பேசுவதால் சோம், கேபி அமைதி காக்கின்றனர். பாலா, ரம்யா பேசுவதால், ஆஜீத், ஷிவானி சைலன்ட் ஆக மொத்தம் ஒட்டுமொத்த பேரும் நேராகவோ மறைமுகமாகவோ ஆரிக்கு எதிராக செயல்படுகின்றனர்.

  நாட்டை எப்படி மாத்துவீங்க

  பாலாஜி முருகதாஸ் பண்ணும் அட்டகாசங்களை கேள்வி கேட்காமல், அவருக்கு ரெட்கார்டு கொடுத்து வெளியே அனுப்பவில்லை என்றால், கமல் மீது நம்பிக்கை போய்விடும் என ஏகப்பட்ட ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டையே உங்களால் திருத்த முடியவில்லை என்றால், நாட்டை எப்படி மாத்துவீங்க என கமலுக்கும் டோஸ் கிடைக்கிறது. அடுத்த சீசன் ஹோஸ்ட் பண்ணுவாரா?

  ரெட் கார்டு வேண்டும்

  "இந்த சைக்கோ சோம்பேறிய வெளியே அனுப்புங்க" என ஏகப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து #RedCardForBalaji ஹாஷ்டேக்கை 16 ஆயிரம் ட்வீட்டுக்கு மேல் போட்டு ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர். ஆரிக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால், இனி பிக் பாஸ் நிகழ்ச்சியையே பார்க்க மாட்டோம் என்றும் திட்டி வருகின்றனர்.

  English summary
  Netizens wants Red Card For Balaji and create a hashtag and trending in Twitter. Bigg Boss fans trolled Balaji Murugadoss and create memes about him.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X