»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
செல்லமே படத்தில் வரும் கவர்ச்சி காட்சிகளின் புகைப்பட ஸ்டில்களை வெளியிட வேண்டாம் என்று தயாரிப்பாளருக்கு உத்தரவு போட்டுள்ளாராம் ரீமா சென்.

கவர்ச்சி காட்டுவதில் கஞ்சத் தனமே காட்டாதவர் ரீமாசென். இவர் இப்போது செல்லமே மற்றும் குஷ்பு தயாரிப்பில் அவரது கணவர் சுந்தர் இயக்கும், கிரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் செல்லமே படத்தில் கூடுதல் தொகைக்கு புக் செய்யப்பட்டதால், பஞ்சமில்லாமல் கவர்ச்சி தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தின் தயாரிப்புப் பணிகள் தாமதமாகி வருவதால், படத்தைப் பற்றிய செய்திகளை பரபரப்பாக வைத்திருந்தால் தான் அதை போணி செய்ய முடியும் என்று முடிவு செய்த தயாரிபாளர் தரப்பு அதிரடியாக ரீமாவின் ஸ்டில்களை வெளியிட்ட வண்ணம் இருக்கிறது.

குறிப்பாக குளியல் காட்சி ஸ்டில்கள் வாரம் ஒன்றாக வெளியிட்டு ரசிக மகா ஜனங்களை சூடு ஏற்றி வருகிறது தயாரிப்பாளர் வட்டாரம்.

ஸ்டில்களைப் பார்த்த பலரும் ரீமாவிடம், இப்படிக் கவர்ச்சி காட்டியுள்ளீர்களே என்று குசலம் விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.

மேலும் தெலுங்கில் இவர் நடித்து வரும் ஒரு படத்தில், செல்லமே ஸ்டில்களை சுட்டிக் காட்டி அதைவிட கொஞ்சம் கூடுதலாகவே குளிக்கச் சொல்லி (எக்ஸ்போஸ் செய்யச் சொல்லி) நச்சரிக்கிறார்களாம் ஹைதராபாத்வாலாக்கள்.

விட்டால் தன்னை இன்னொரு ஷகீலா ஆக்கிவிடுவார்கள் என்று மிரண்டு போன ரீமா, இதுவரை வெளியிட்ட ஸ்டில்கள் போதும், இனிமேல் இந்த வேலையெல்லாம் வேண்டாம். அப்படியே வெளியிட்டாலும் என்னிடம் காட்டிவிட்டுச் செய்யுங்கள் எனறு தயாரிப்பாளரிடம் கூறிவிட்டாராம்.நறநறத்துக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் தரப்பு

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil