»   »  ஷில்பா-ரீமாவுக்கு வாரண்ட் வந்து மாட்டிய குஷ்பு

ஷில்பா-ரீமாவுக்கு வாரண்ட் வந்து மாட்டிய குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு மதுரை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.


தமிழ் மாலை நாளிதழ் ஒன்றில் நடிகைகள் ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ஆகியோரதுமுழு உருவ புகைப்படம் வெளியாகியிருந்தது. இது மிகவும் ஆபாசமாக இருப்பதாககூறி பத்திரிக்கை மீதும் ரீமா சென், ஷில்பா ஷெட்டி ஆகியோர் மீதும் மதுரையைச்சேர்ந்த வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு ரீமா சென், ஷில்பா ஷெட்டிக்கு நீதிமன்றம்பலமுறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

இதையடுத்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிஇளங்கோவன் வாரண்ட் பிறப்பித்தார்.


மேலும் சென்னை, மும்பை போலீஸாரும் வாரண்ட் உத்தரவை அமல்படுத்திஇருவரையும் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

நடிகை குஷ்புக்கும் பிடிவாரண்ட்:

இந் நிலையில் ஷில்பா ஷெட்டி, ரீமா சென்னுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த நடிகை குஷ்புக்கும்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

இது குறித்து குஷ்பு கருத்துத் தெரிவிக்கையில், நீதிபதிகள் சரியான கவனம் செலுத்தாமல் இதுபோன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாககருத்து தெரிவித்தார்.


இதனால் குஷ்பு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகுஷ்புவுக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே நடிகைகள் ரீமா சென், ஷில்பா ஷெட்டி, குஷ்பு ஆகியோர் நீதிமன்றத்துக்கு பதிவு தபால் மூலம் பதில் அனுப்பி உள்ளனர். அதில் தாங்கள்படப்பிடிப்பில் இருப்பதால் தங்களால் கோர்ட்டில் ஆஜராக இயலாது என்று தெரிவித்துள்ளனர்.

நடிகைகள் தங்களுக்காக வழக்கறிஞர்களை நியமித்த பின் கடிதம் மூலம் கோர்ட்டில் ஆஜராக இயலாது என்று தெரிவித்துள்ளதால் நீதிபதி இளங்கோபுதிதாக பிடிவாரண்டு பிறப்பித்து ரீமா சென், ஷில்பா ஷெட்டி, குஷ்பு ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil