»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இங்கிலாந்தில் மிகப் பெரும் தொகையை ஊதியமாக ஈட்டும் முதல் 10 ஆசியர்களில் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒருவர் என்று தெரியவந்துள்ளது.ஆண்டுதோறும் இங்கிலாந்தில் அவர் ஈட்டி வரும் தொகை 2 மில்லியன் பவுண்டுகள்.

இத் தகவலை இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்த ரஹ்மான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில்படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டார். இப்போதெல்லாம் பெரும்பாலும் லண்டனில் தான் வசித்து வருகிறார்.

ஷேக்ஸ்பியரின் நாடகத்துக்கு இசையமைக்கச் சென்ற அவர் கிட்டத்தட்ட லண்டன்வாசியாகிவிட்டார். இந்த நாடக இசைப் பணிக்குஇடையே ஆண்ட்ரூ லாய்ட் வெப்பார் தயாரித்த பாம்பே ட்ரீம்ஸ் ஆல்பத்துக்கு இசை அமைத்தார் ரஹ்மான்.

இந்தப் பணிகளுக்காக ரஹ்மானுக்கு பெரும் பணம் தரப்பட்டுள்ளது. மேலும் இடையிடையே பாபா போன்ற படங்களுக்கும்அங்கிருந்தபடியே இசைமைத்துக் கொடுத்தார். இந்தப் பணத்தையும் தனது லண்டன் வங்கிக் கணக்குகளிலேயே காட்டியுள்ளார் ரஹ்மான்.

இதனால் ஆண்டுதோறும் மிகப் பெரும் அளவு பணத்தை ஊதியமாகப் பெரும் ஆசிய நாட்டைச் சேர்ந்த முதல் 10 பேரில் ரஹ்மானும்ஒருவராகிவிட்டார். கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ரஹ்மான் வாங்கிய சம்பளம் 15 கோடிகள் (2 மில்லியன் பவுண்ட்கள்).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil