»   »  றெக்க: 'தல தளபதி' வில்லன்களுடன் மோதும் விஜய் சேதுபதி

றெக்க: 'தல தளபதி' வில்லன்களுடன் மோதும் விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'றெக்க' படத்தில் விஜய், அஜீத் பட வில்லன்களுடன் விஜய் சேதுபதி மோதப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'வா டீல்' புகழ் ரத்தினசிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகும் புதிய படத்திற்கு 'றெக்க' என பெயர் சூட்டியிருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளார்.


Rekka: Kabir Singh and Harish Uthaman Play Antagonist

இதுவரை ரவுடி, போலீஸ், டாக்டர் வேடங்களில் நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் முதன்முறையாக வக்கீலாக நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி 2 வில்லன்களுடன் இப்படத்தில் மோதப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


'வேதாளம்' படத்தில் அஜீத்துக்கு வில்லனாக நடித்த கபீர் சிங் மற்றும் 'விஜய் 60' படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் ஹரிஷ் உத்தமன் ஆகிய இருவரும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்கப் போகிறார்களாம்.


இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kabir Singh and Harish Uthaman Play Antagonist in Vijay Sethupathi's Rekka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil