»   »  ஏற்கெனவே ஒரு ஆபாசப் பாட்டுக்கு கமிஷனரிடம் கைகட்டி நின்றவர் அனிருத்!

ஏற்கெனவே ஒரு ஆபாசப் பாட்டுக்கு கமிஷனரிடம் கைகட்டி நின்றவர் அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீப் பாடலுக்காக செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு, போலீசாரிடமிருந்து தப்பிக்க எனக்கும் அந்தப் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லிக் கொண்டுள்ள அனிருத்துக்கு, இந்த மாதிரி சர்ச்சைகள் புதிதல்ல.

ஏற்கெனவே இருமுறை ஆபாச சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கோரியவர் இந்த அனிருத்.

Releasing abusive and vulgar songs is not new to Anirudh

ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் அனிருத்து சினிமா உலகில் ஸ்பெஷல் மரியாதை. பெரிய வாய்ப்புகள். அவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும்தான். இன்று வரை தனுஷின் படங்களுக்கு அனிருத்தான் ஆஸ்தான இசையமைப்பாளர்.

அனிருத்தை தன் தம்பி என்று கொண்டாடி வருகிறார் தனுஷ்.

ஆனால் அந்த அனிருத் செய்யும் வேலைகள் பெரும்பாலும் சில்லியானவை. பரபரப்பான இசையமைப்பாளராக வளர்ந்து வந்த நேரத்தில்தான் தன்னைவிட பல ஆண்டுகள் வயது மூத்த ஆன்ட்ரியாவின் உதட்டைக் கடித்தபடி இருந்த படங்களை ஆன்லைனில் கசியவிட்டார். முதலில் யாரோ லீக் பண்ணிவிட்டதாகக் கூறியவர், பின்னர் அந்தப் படங்களுக்காக வருத்தம் தெரிவித்தார். செய்யாத வேலைக்கு இவர் ஏன் வருத்தம் தெரிவித்தார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் உடலுறவைக் குறிக்கும் மோசமான ஆங்கில வார்த்தையை வைத்து கொச்சையான ஆங்கிலப் பாடலை வெளியிட்டார். அதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அனிருத்தைக் கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்கள் குவிந்தன.

அனிருத் கைதாகும் சூழல் ஏற்பட்டபோது, அப்போதைய கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ராகவேந்தர். மகனின் கேவலமான காரியத்துக்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். எச்சரித்து அனுப்பினார் ஜார்ஜ்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. மீண்டும் தன் ஆபாச தாண்டவத்தை பீப் பாட்டு என்ற பெயரில் ஆடி முடித்துவிட்டு, 'அப்படியெல்லாம் நான் செய்யவே இல்லைய.. நல்ல பிள்ளையாக்கும்' என்று சீன் போடுகிறார்!

English summary
Releasing controversial pics and abusive songs is not new to Anirudh. He has already released an abusive, vulgar song a couple of years ago and warned by the then Commissioner of Police.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil