twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாரடைப்பு காரணமாக.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடன இயக்குனர் டிஸ்சார்ஜ்!

    By
    |

    மும்பை: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து பிரபல இயக்குனர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    பிரபுதேவா நடிப்பில் வெளியான ஏபிசிடி படத்தை இயக்கியவர் ரெமோ டிசோசா. இவர் பாலிவுட் நடன இயக்குனர்.

    இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, இதன் அடுத்தப் பாகத்தை இயக்கினார். அதிலும் பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்தார்.

    இப்படியாயிடுச்சே.. நல்ல பலன் சொல்வாங்களா? அஸ்ட்ராலஜர்களை தேடி அலையும் பிரபல ஹீரோயின்! இப்படியாயிடுச்சே.. நல்ல பலன் சொல்வாங்களா? அஸ்ட்ராலஜர்களை தேடி அலையும் பிரபல ஹீரோயின்!

    ஸ்ட்ரீட் டான்சர்

    ஸ்ட்ரீட் டான்சர்

    வருண் தாவன், ஷ்ரத்தா கபூர் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படமும் வரவேற்பை பெற்றது. அடுத்து ஃபிளையிங் ஜாட், ரேஸ் 3, ஸ்ட்ரீட் டான்சர் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார். சில படங்களை தயாரித்துள்ள அவர், இப்போது டைம் டு டான்ஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

    திடீர் மாரடைப்பு

    திடீர் மாரடைப்பு

    ஏராளமான பாலிவுட் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள ரெமோ, சில படங்களில் நடித்தும் உள்ளார். முன்னணி இந்தி ஹீரோ படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வரும் ரெமோ டிசாசோவுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    மருத்துவ கண்காணிப்பு

    மருத்துவ கண்காணிப்பு

    இதையடுத்து கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இதை அவர் மனைவி லிசெல் டிசோசா, உறுதிப்படுத்தி இருந்தார்.

    வீடு திரும்பினார்

    வீடு திரும்பினார்

    இந்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரெமொ டிசோசாவுக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று வீடு திரும்பியுள்ளார். இதை அவர் மனைவி லிசெல் தெரிவித்துள்ளார். நாங்கள் வீடு திரும்பிவிட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    choreographer and director Remo D'Souza, who was admitted to Mumbai's Kokilaben Hospital after suffering a heart attack a few days ago, has been discharged.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X