சினிமானாலும் ஒரு லாஜிக் வேணாமா...பீஸ்ட் படத்தை கலாய்த்த விமானப்படை அதிகாரிகள்

சென்னை : பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை இந்திய விமானப்படையின் ஓய்வுபெற்ற அதிகாரிகள் சிலர் கலாய்த்து ட்விட்டரில் கமெண்ட் செய்திருப்பதாக ஆங்கில இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக ஏப்ரல் 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் மோசமான விமர்சனங்களையே பெற்றது. அதே சமயம் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை தற்போது வரை கொண்டாடி வருகின்றனர்.

250 கோடிகளை கடந்த பீஸ்ட் வசூல்

250 கோடிகளை கடந்த பீஸ்ட் வசூல்

தியேட்டரில் ரிலீசான 28 நாட்களில் ஓடிடி.,யில் பீஸ்ட் படம் வெளியிடப்பட்டது. தியேட்டரில் இதுவரை 250 கோடிக்கும் பீஸ்ட் படம் வசூல் செய்துள்ளது. முதல் வாரத்தில் பீஸ்ட் படத்திற்கு அதிக வரவேற்பு இருந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீசிற்கு பிறகு பீஸ்ட் படத்தின் வசூல் டல்லடிக்க துவங்கியது. இந்த படத்தை திரை பிரபலங்கள் சிலரே விமர்சித்தனர். இதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

 இது தான் பீஸ்ட் கதை

இது தான் பீஸ்ட் கதை


பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த பீஸ்ட் படத்தில் விஜய் ரா ஏஜன்ட் ரோலில் நடித்திருந்தார். மால் ஒன்றில் தீவிரவாதிகளால் கடத்தி வைக்கப்பட்டிருக்கும் மக்களை காப்பாற்றுவதுடன், தீவிரவாதிகளின் தலைவனையும் தேடி சென்று விஜய் பிடித்து வருவது தான் பீஸ்ட் படத்தின் கதை. படத்தின் க்ளைமாக்சில், விஜய் போர் விமானத்தை ஓட்டிச் சென்று, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள் தலைவனை கட்டி தூக்கி வருவதாக காட்டப்பட்டிருக்கும்.

பீஸ்ட் க்ளைமாக்சை கலாய்த்த அதிகாரிகள்

இந்த க்ளைமாக்ஸ் சீன் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரிகள் சிலர் பீஸ்ட் க்ளைமாக்சை கிண்டல் செய்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளதாக ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் சிவராமன் சஜன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் வீடியோவை பகிர்ந்து, இந்த வீடியோவில் எனக்கு நிறைய கேள்விகள் உள்ளது. இந்திய சினிமாவில் இது போன்ற காட்சிகள் இடம்பெறுவது ஒன்றும் புதிதல்ல.

ஒரு லாஜிக் வேணாமாப்பா

என்ன தான் சினிமா என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா. ஒரு பெரிய நடிகரின் படத்தின் கதையில் இப்படியா செய்வது. இது போன்ற போர் விமானங்களை சாதாரண மக்களால் கையாள முடியாது. ஆனால் விஜய் சர்வ சாதாரணமாக இயக்குவதாக காட்டப்பட்டுள்ளது ஓவராக உள்ளது என கூறி உள்ளார். இதே போல் நவம் திரிபாதி என்பவர், விஜய் ஜெட் விமானம் ஓட்டும் போட்டோவை குறிப்பிட்டு, ஜெட் விமானத்தில் மில்டன் பாட்டில் எப்படி வந்தது என கேட்டு கலாய்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X