»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது கணவர் சுரேஷ் மேனனிடம் இருந்து விவகாரத்து கேட்டுள்ளார் நடிகை ரேவதி.

தமிழில் ரேவதி உச்சகட்டத்சில் இருந்தபோது கேமராமேன் சுரேஷ் மேனனுடன் காதல் ஏற்பட்டது. 1987ம்ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பின் மேனனுக்கு பட வாய்ப்புக்கள் குறைந்தன. ரேவதிக்கும் சான்ஸ் குறைந்தது.

இதையடுத்து சுரேஷ் மேனனுக்காக சொந்தப் படம் எடுத்தார் ரேவதி. புதிய முகம் என்ற அந்தப் படத்தில் மேனனும்ரேவதியும் இணைந்து நடித்தனர்.ஆனால், அந்தப் படம் ஊத்திக் கொள்ளவே பெரும் நஷ்டம் ஏற்பட்டது. சிலசொத்துக்களை ரேவதி இழக்க வேண்டியதானது.

இதைத் தொடர்ந்து இருவரும் டிவி சீரியல் தயாரிப்பில் இறங்கினர். அதிலும் பெரும் பொருள் நஷ்டம். இதனால்இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பின்னர் மீண்டும்சேர்ந்தனர். ரேவதி தேர்தலில் போட்டியிட்டு பெரும் நஷ்டமடைந்தார்.

இந் நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் விரிசல். ஒரே வீட்டில் வசித்தாலும் பேச்சுவார்த்தை கூட இல்லாதநிலை ஏற்பட்டது. பொருளாதாரரீதியில் நலிவடைந்த ரேவதி சில சினிமாக்காரர்களின் உதவி பெற வேண்டிவந்தது. மேனனால் ரேவதிக்கு பெரிய அளவில் உதவ முடியவில்லை. இதையடுத்து மேனன் தனியே பிரிந்துவாழ்ந்து வந்தார்.

மித்ர் உள்பட சில சினிமா தயாரிப்பு- டைரக்டஷன் வேலைகளில் இறங்கினார் ரேவதி. இப்போது டிவிசீரியல்களில் கவனம் செலுத்துவதோடு மீண்டும் டைரக்ஷனிலும் இறங்கும் முயற்சியில் இருக்கிறார் ரேவதி.மேனனோடு பேச்சுவார்த்தையே இல்லை.

இதனால் இருவரும் விவாகரத்து வாஙகி விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டே வந்தது. அது இப்போதுநடந்துள்ளது. இப்போது இருவருமே ஒருவரிடமிருந்து ஒருவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil