»   »  ஜல்லிக்கட்டுக்கு போராடினீங்க, சித்தப்பா அரசுக்கு எதிராக எதுவும் இல்லையா?: நடிகை ரஞ்சனி

ஜல்லிக்கட்டுக்கு போராடினீங்க, சித்தப்பா அரசுக்கு எதிராக எதுவும் இல்லையா?: நடிகை ரஞ்சனி

Posted By:
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: சித்தப்பா அரசுக்கு எதிராக போராடுமாறு தமிழக மக்களை நடிகை ரஞ்சனி கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 30 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவில்லை.

இந்நிலையில் இது குறித்து நடிகை ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

கருப்பு தினம்

கருப்பு தினம்

இது தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல அதிமுகவுக்கும் கருப்பு தினம். அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். சாரின் கனவுகளை மன்னார்குடி மாபியா தகர்த்ததை நினைத்து என் இதயத்தில் ரத்தம் கசிகிறது.

இது வேண்டுமா?

இது வேண்டுமா?

தமிழக மக்களே இது தான் உங்களுக்கு வேண்டுமா? ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என்று கூறி அதன் மீதான தடையை எதிர்த்து புரட்சி செய்தீர்களே, இப்பொழுது என்ன ஆனது?

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

உங்களுக்காக ஜல்லிக்கட்டை கொண்டு வந்த ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக இருங்கள். சித்தப்பா அரசுக்கு எதிராக புரட்சி செய்ய வேண்டிய நேரம் இது.

சொத்து

நீங்கள் உண்மையான அதிமுகவுக்கு தானே தவிர நாம் பார்ப்பவர்களுக்கு வாக்களிக்கவில்லை. ஆட்சிக்கு வராமலேயே இந்த மாபியா சொத்துக் குவித்துள்ளது, மேலும் நீங்கள் தேர்வு செய்த எம்.எல்.ஏ.க்களை சிறை வைத்தது. அதனால் இந்த விஷயத்தை தமிழக இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் முன்பு வைக்கிறேன். மறுதேர்தல் வேண்டும் என்று கோரிக்கை விடுங்கள் என ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

English summary
Actress Ranjini has asked the people of Tamil Nadu to revolt againt "CHITTAPPA'S" government.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil