»   »  ரஜினியிடம் கமல் இழந்தது போன்று நீங்களும் இழந்துவிடாதீர்கள்: ஷாருக்கானுக்கு ராம் கோபால் வர்மா அட்வைஸ்

ரஜினியிடம் கமல் இழந்தது போன்று நீங்களும் இழந்துவிடாதீர்கள்: ஷாருக்கானுக்கு ராம் கோபால் வர்மா அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கமல் ஹாஸன் செய்த தவறை செய்ய வேண்டாம் என பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இயக்குனர் ராம் கோபால் வர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு திடீர் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பற்றி கவலை எழுந்துள்ளது. இதையடுத்து ட்விட்டர் மூலம் ஷாருக்கானுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். உலக நாயகன் கமல் ஹாஸன் செய்த அதே தவறை செய்ய வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கமல்

கமல்ஹாஸன் வேறு ஒருவராக ஆகாமல் இருந்திருந்தால் ரஜினிகாந்தை விட சிறந்தவராக ஆகியிருக்க முடியும். அதனால் கமலின் தவறுகளில் இருந்து ஷாருக்கான் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

ரஜினி

ரஜினிகாந்த் ரஜினிகாந்த் தான். ஏன் என்றால் அவர் அவராகவே இருக்கிறார். ஆனால் கமல் எப்பொழுதுமே வேறு ஒருவராக ஆக முயற்சிக்கிறார். ஷாருக்கான் சல்மான் போன்று அவராகவே இருப்பார் என நம்புகிறேன்.

ஷாருக்கான்

ஷாருக்கான் கமல் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் மெகா ரஜினிகாந்த் ஆவதில் இருந்து அவரை தடுக்கும் நெருக்கமானவர்களின் பேச்சை கேட்காமல் இருக்க வேண்டும்.

ஸ்டார்

மெகாஸ்டார் ஷாருக்கான் ஃபேன், குள்ளர் போன்று நடிப்பதன் மூலம் தனது நட்சத்திர அந்தஸ்தை ரஜினிகாந்திடம் இழந்த கமல் ஹாஸன் செய்தது போன்றே பெரிய தவறு ஆகும்.

English summary
Director Ram Gopal Varma has warned Shahrukh Khan over losing stardom to Salman Khan just like Kamal lost to Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil