பழைய சோறு திங்கறதுக்கெல்லாம் புரமோவா.. சம்யுக்தா அப்படியே வேல் கேங்கில் இணைஞ்சிட்டாங்க போல!

சென்னை: ரியோவும் நிஷாவும் பழைய சோறு திங்கறதை அன்சீன் புரமோவாக தற்போது வெளியிட்டு ரசிகர்களின் வயிற்று எரிச்சலை வாரிக் கொட்டி வருகின்றனர்.

தயவு செஞ்சு இந்த சீனை நிகழ்ச்சியில் வைத்து விட வேண்டாம் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

பிக் பாஸ் போட்டியாளர்கள் பாவம் தினமும் பழைய சோத்தையே திங்கிறாங்க.. இதெல்லாம் அவங்க குடும்பத்தினர் பார்த்தா என்னாகும் என்கிற கேள்விகளும் எழுந்து வருகின்றன.

ஜாலி புரமோவாம்

ஜாலி புரமோவாம்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் மூன்று புரமோக்களும், உச்சக்கட்ட சண்டையை முன் வைத்து சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், அன்சீன் புரமோ ஜாலியாக வைக்க வேண்டும் என்பதற்காக மொக்கை காமெடி போடுவதாக போட்டு வெறுப்பேற்றி வருகின்றனர். இன்னும் என்னவெல்லாம் காட்டுவாங்களோ?

பழைய சோறு பச்சை வெங்காயம்

பழைய சோறு பச்சை வெங்காயம்

பிக் பாஸ் வீட்டில் வார வாரம் பிரியாணி, பரோட்டா, கலக்கி என ஏகப்பட்ட ஐட்டங்களை இறக்கினாலும், சோத்தை வடிக்க தெரியாமல் வடித்து விட்டு, அதனை பழைய சோறாக மாற்றி பிரிட்ஜில் வைத்து தின்பதையே போட்டியாளர்கள் வாடிக்கையாக கொண்டு உள்ளனர். பழைய சோறும், பச்சை வெங்காயத்தையும் கடித்துக் கொண்டே, நிஷாவும் ரியோவும் சாப்பிடுவதை அன்சீன் புரமோவில் காண்பித்துள்ளனர்.

ரசித்து ருசித்து

ரசித்து ருசித்து

பழைய சோறுக்கு உலகில் எந்த உணவும் ஈடாகாது என்பது தமிழ் ரசிகர்களுக்கு தெரியவே தெரியாது. அதனை எடுத்து சொல்ல இப்படி ஒரு புரமோவை ஏன் போட வேண்டும் என்றும் ரசிகர்கள் வெளுத்து வருகின்றனர். அர்ச்சனா அக்கா பழைய சோத்தை போட போட, ரியோவும் நிஷாவும் ரசித்து ருசித்து சாப்பிடுவதை பார்க்க சகிக்கவே இல்லை.

பார்பி கேர்ள்

பார்பி கேர்ள்

சம்யுக்தாவை டம்மி மம்மி என ஹவுஸ்மேட்களே சொல்வதாக அவரே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சம்யுக்தாவை பார்பி கேர்ள் என புதிய பட்டப்பெயர் வைத்து ரியோ ராஜ், ஐஸ் வைத்தது மட்டுமின்றி, ஐஸ் பிரியாணியை பார்பி கேர்ளுக்கும் கொஞ்சம் போடுங்க என அர்ச்சனாவிடம் சொல்வது எல்லாம் ரொம்பவே ஓவர்.

வேல் கேங் அன்புடன் வரவேற்கிறது

வேல் கேங் அன்புடன் வரவேற்கிறது

அர்ச்சனா அக்கா தலைமையில் ரியோ ராஜ், நிஷா, சோமசேகர், ஜித்தன் ரமேஷ், கேபி உள்ளிட்ட பலர் குரூப்பாக இருக்கும் வேல் கேங்கில் புது வரவாக சம்யுக்தாவையும் இணைத்து விட்டனர். சம்யுக்தாவும், இந்த கேங்கில் சேர்ந்தால் தான் அர்ச்சனா மாறி நாமினேஷனுக்கு வராமல் தப்பிக்கலாம் என்று நினைத்து சேர்ந்து விட்டார்.

ஆப்பு வைத்த அனிதா

ஆப்பு வைத்த அனிதா

வேல் கேங்கில் இருந்து அர்ச்சனா, நிஷா மற்றும் சம்யுக்தா ஆகிய மூவரையும் வெளியேற்ற வேண்டும் என பாலாஜி முருகதாஸ் போட்டுள்ள திட்டத்தை, அவரது இன்ஸ்டன்ட் அல்லக்கையாக மாறி உள்ள அனிதா சம்பத் கேட்டு நடந்து வருகிறார். சம்யுக்தா அர்ச்சனா பக்கம் சாய்ந்ததை அறிந்த அவர், உடனடியாக சம்யுக்தாவை நாமினேஷனில் இழுத்து விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X