Kantara Chapter 1 X Review: தெறிக்கவிட்ட ரிஷப் ஷெட்டி.. காந்தாரா சாப்டர் 1 வெறித்தனம்!
சென்னை: 2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தின் இரண்டாம் பாகமாக 'காந்தாரா சாப்டர்1' படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. பான் இந்திய திரைப்படமாக கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில், ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவையா,பிரமோத் ஷெட்டி, ரகேஷ் பூஜாரி, பிரகாஷ் துமினாட் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்

காந்தாரா அத்தியாயம் 1 படத்தை ப்ரீமியம் காட்சியைப் பார்த்த இணையவாசி ஒருவர் Kantara Chapter 1 போர்ச்சுகீசு மற்றும் அரபுகள் இந்தியாவுடன் எவ்வாறு வர்த்தகம் செய்தனர், குதிரைகள் எப்படி வந்தன, மசாலா வர்த்தகம் போன்ற விசயங்கள் குறித்து குழுவினர் தீவிரமாக ஆய்வு மிகச் சிறப்பாக படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். தெய்வீகத்தின் இடையீடு, குலங்கள் மற்றும் அரசர்களின் மோதல்கள் வலுவாக போன்றவற்றின் திரைக்கதை வலுவாக எழுதப்பட்டு திறமையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. புலி காட்சி மற்றும் இடைவேளை காட்சி உணர்ச்சிப்பூர்வமாக பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது. அனைத்து ஆக்ஷன் காட்சிகளும் அழகாக காட்டப்பட்டுள்ளது. இதற்காக ரிஷப் ஷெட்டி கடுமையாக உழைத்து இருப்பது படத்தில் தெரிகிறது. ருக்மினி அழகிலும் திறமையிலும் படத்தில் ஜொலிக்கிறாள். ஆனால், தமிழில் சில காமெடி காட்சிகள் ஒட்டவில்லை என பதிவிட்டுள்ளார்.
மனதை கவரும் படம்: மற்றொரு இணையவாசி, காந்தரா சேப்டர் 1 படத்திற்கு 5க்கு 4.5 மதிப்பெண் அளித்துள்ளார். காந்தாரா ஃபயராக இருக்கிறது. மனதை கவரும் படமாக இருக்கிறது. ரிஷப் ஷெட்டி தலைசிறந்த கதைசொல்லி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். காட்சியமைப்பு, விசுவல்கள், உணர்வுகள், அசத்தலான கிளைமாக்ஸ், நடுங்க வைக்கும் தருணம், ஆச்சரியப்பட வைக்கும் உண்மை. உண்மையில் இது இந்தியாவின் ஆன்மாவிலிருந்து வந்த தூய சினிமா என பதிவிட்டுள்ளார்.
கூஸ்பம்ப்ஸ் : காந்தாரா அத்தியாயம் 1 இரண்டாம் பாதியில் வரும் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா தெய்வீக அவதாரம் காட்சி சும்மா தீயாக இருந்தது. தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் முழுக்க தியேட்டர் முழுவதும் கூஸ்பம்ப்ஸ். இந்த ஆண்டின் மிக அசத்தலான, மறக்க முடியாத படங்களில் ஒன்றாக இந்த படம் நிச்சயம் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
கண்ணைப்பறிக்கும் விஷூவல்: ரிஷப் ஷெட்டி மீண்டும் செமயாக கலக்கியிருக்காரு, இது சாதாரண படம் இல்லை. ஒரு அனுபவம் மாதிரி இருக்கு. படம் ஆரம்பிக்கும் முதல் இறுதி வரை, படம் விறுவிறுப்பாக செல்கிறது. கதையில் இருக்கும் உண்மையான உணர்வுகள், தெய்வீக நம்பிக்கை, கண்ணை பறிக்கும் விசுவல்கள் என அனைத்தும் உங்களை கொள்ளை கொண்டுவிடும் என பதிவிட்டுள்ளார்.
அபூர்வ அனுபவம்: படத்தை பார்த்து பூரித்துப்போன இணையவாசி ஒருவர், காந்தாரா அத்தியாயம் 1 ஒரு சாதாரண சினிமா இல்லை. புராணம், கலாசாரம், உண்மையான கதை சொல்லல் ஆகியவற்றை கண்கவர் காட்சிகளுடன் கலந்த ஒரு அபூர்வ அனுபவம். அதன் சூழல் அமைப்பிலிருந்து ரிஷப் ஷெட்டியின் வலுவான இயக்கம் வரை, ஒவ்வொரு காட்சியும் ஆழ்ந்த ஈர்ப்புடனும் இருக்கிறது. இந்த படம் வெறும் பொழுதுபோக்கு படம் இல்லை. இது ஒரு இதயத்தை கவரும் படம். படத்தின் இசை, சினிமா போடோகிராபி, நடிகர்களின் நடிப்பு, இவை அனைத்தும் ஒன்றிணைந்து, ஒரு பிராந்திய படத்தைத் தாண்டி, உலக தர சினிமா வரிசையில் நுழைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











