Kantara Chapter 1 box office day 3: மெய்சிலிர்க்க வைத்த காந்தாரா சாப்டர் 1.. மூன்றாம் நாள் வசூல்!
சென்னை: ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, நடித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், வெளியான மூன்றாவது நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் ரூ. 160 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்தப் படம், முதல் வார இறுதிக்குள் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.
ரிஷப் ஷெட்டியின் முந்தைய படைப்பான 'காந்தாரா' திரைப்படம் 2022 மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், அதன் முதல் பாகமான 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் நடக்கும் பழங்கால நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரிஷப் ஷெட்டியின் தனித்துவமான கதை சொல்லும் பாணியும், திரைக்கதையும், நடிப்புத் திறனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே சமூக வலைத்தளங்களில் படத்தை அனைவரும் பாராட்டி வருவதால் தியேட்டரில் மக்கள் குவித்து வருகின்றனர்.

மூன்றாம் நாள் வசூல்: அக்டோபர் 2ந் தேதி வெளியான இப்படம், முதல் நாளில் உலக அளவில் ரூ.61 கோடிக்கும் மேல் வசூலித்தது. குறிப்பாக, கர்நாடகாவில் ரூ.26 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.13 கோடி, தமிழ்நாட்டில் ரூ.5.5 கோடி, கேரளாவில் ரூ.5.25 கோடி மற்றும் பிற மாநிலங்களில் ரூ.4 கோடி வசூலித்தது. வெளிநாடுகளில் இதன் வசூல் ரூ.3 கோடி ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை கர்நாடகாவில் 13.5 கோடியும், ஆந்திராவில் 11.75 கோடியும், தமிழ் நாட்டில் 4.5 கோடியும், கேரளாவில் 3.75 கோடியை வசூலித்துள்ளது. Sacnilk தகவலின் படி சனிக்கிழமையான நேற்று, "காந்தாரா சேப்டர் 1" உலகம் முழுவதும் ரூ.55 கோடி வசூலித்து, மொத்த வசூலை ரூ.162.85 கோடியாக உள்ளது. 'காந்தாரா சாப்டர் 1' வெறும் மூன்று நாட்களில் ரூ. 160 கோடிக்கு மேல் வசூலித்தது, இந்தியத் திரையுலகில் ஒரு புதிய சாதனை எனத் திரையுலக வல்லுநர்கள் பாராட்டி வருகின்றனர். இதன் மூலம் ரிஷப் ஷெட்டி மீண்டும் ஒரு பான்-இந்திய நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். வரும் நாட்களில் இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











