»   »  நான் எதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஆர்.ஜே. பாலாஜி

நான் எதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதில் சொல்ல வேண்டும்: ஆர்.ஜே. பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் நிகழ்ச்சியை கலாய்த்தது பற்றி ஆர்.ஜே. பாலாஜி ஒரு வழியாக விளக்கம் அளித்துள்ளார்.

கடவுள் இருக்கான் குமாரு படத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கலாய்த்துள்ளார்.

இதை பார்த்த லட்சுமி கோபம் அடைந்து ட்விட்டரில் பாலாஜியை விளாசிவிட்டார்.

அமைதி

அமைதி

லட்சுமி தன்னை அவ்வளவு விளாசியும் பாலாஜி பதிலுக்கு ட்வீட் போடவில்லை. அதை பார்த்த லட்சுமி அமைதியாக இருப்பது கோழைத்தனம் என்று கூறினார்.

பாலாஜி

பாலாஜி

லட்சுமி விவகாரம் குறித்து அமைதி காத்த பாலாஜி பேட்டி ஒன்றில் இது பற்றி பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, இந்த பேட்டியில் நான் உங்களை தப்பாக பேசிவிட்டேன். நாளைக்கு ஒருத்தவங்க இதற்கு நீங்கள் பொறுப்பு என்றால் நான் பதில் கூற முடியும் என்றார்.

படம்

படம்

நான் ரேடியோவில் தப்பா பேசிட்டேன், யூடியூபில் அஃபென்சிவாக வீடியோ போட்டால் பதில் சொல்ல முடியும். இன்னொருத்தரோட படத்தில் காசு கொடுத்ததால் நான் நடிக்கும்போது நான் எனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தையே செய்கிறேன். அதனால் லட்சுமி விவகாரத்திற்கு பதில் சொல்வது எந்த விதத்திலும் சரியாக இருக்காது என்றார் பாலாஜி.

என்னிடம் கேள்வி

என்னிடம் கேள்வி

படத்தில் அத்தனை பேர் நடித்தும் என்னிடம் கேள்வி கேட்பது சரியாகத் தெரியவில்லை. ஒரு நிகழ்ச்சியை கலாய்த்தால் அதை பார்த்து கைதட்டி சிரித்த அனைவரையும் தானே திட்ட வேண்டும். நீங்கள் எல்லாம் ஏன்டா சிரிக்கிறீங்க என்று திட்டணும் என்று பாலாஜி தெரிவித்தார்.

தேவையா?

தேவையா?

அந்த இடத்தில் நான் இருந்தால் இந்த ஷோவை நான் பண்ண வேண்டுமா, எனக்கு இது தேவையா என என்னை நானே கேட்டிருப்பேன். சம்பந்தமே இல்லாமல் ட்வீட் போட்டு. நான் ரைட்டரும் கிடையாது, கிரியேட்டரும் கிடையாது என்று பாலாஜி கூறினார்.

செல்போன்

செல்போன்

நான் கிரியேட்டர் இல்லாத போது அவர் என்னை கேட்க முடியாது. என் சொந்த படமாக இருந்தால் அவர் கேள்வி கேட்கலாம். அவரிடம் என் செல்போன் எண் உள்ளது. எ பிலிம் பை ஆர்.ஜே. பாலாஜி என்று வரும்போது கேள்வி கேட்கலாம் என்றார் பாலாஜி.

English summary
RJ Balaji has finally given reply to actress Lakshmi Ramakrishnan about the spoof scene in Kadavul Irukkan Kumaru.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil