»   »  ஒருவேளை வைரமுத்து கபாலியில் பாட்டெழுதியிருந்தால்...- ஒரு ஆர்ஜேவின் 'கலாய்' கமெண்ட்!

ஒருவேளை வைரமுத்து கபாலியில் பாட்டெழுதியிருந்தால்...- ஒரு ஆர்ஜேவின் 'கலாய்' கமெண்ட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலியில் பாடல் எழுதாத வைரமுத்துவின் பேச்சை நீங்கள் கேட்டீர்கள். ஒருவேளை அவர் பாடல் எழுதியிருந்தால்....

வைரமுத்து பாணியில் படியுங்கள் ஓகே..


கபாலி
க- கடமை
பா- பாலிசி
லி- லீடர் சிப்
கடமை என்னும் பாலிசியே இவனுடைய லீடர்சி...


RJ Rohini's satire on Vairamuthu

இயக்குனர் ரஞ்சித் அவர்கள் ரஜினியை இந்த கதைக்காக இவ்வளவு அழகாக செதுக்கியிருப்பார் என்று எனக்கு நிச்சயம் தெரியும், அது ரஜினியின் ரசிகனாக இருக்கும் ரஞ்சித்தால் மட்டுமே முடியும். இவன் தமிழன் அல்ல ஆனாலும் தமிழனுக்காக முந்தி நிற்பவன்.


இவன் ஒரு பாட்டாளி
பலர் மனதில் குடியிருக்கும் கூட்டாளி
மலேசியாவின் பப்பாளி
ரஞ்சித் வடிவத்தால் உயர்ந்த பெயரானது இந்த #கபாலி


என்னைப் பாட்டெழுத அழைத்த போது சற்று யோசித்தேன். ரஞ்சித்... இவர் எப்படி ரஜினியை இயக்கப்போகிறார் என்று. இப்போது தெரிகிறது பேசும் சத்தம் கேட்காமல் படம் எடுப்பது மணிரத்னம், தான் எடுக்கும் படங்களை பேசவைப்பவன் இந்த ரஞ்சித் என்னும் ரத்தினம்.


மொத்தம் மூன்று பாடல்கள் சந்தோஷ் நாரயணன் இசைத்திருக்கிறார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இந்த சந்தோஷ் நாரயணன்...


மலேசிய தமிழ் மக்களை மையமாக வைத்து படம் எடுக்கப்படிருக்கிறது நிச்சயம் மல்லுக்கட்ட காத்திருக்கிறான் இந்த கபாலி.... ரஜினி இமயத்தின் உச்சிக்கு சென்றவர்.
ரஞ்சித் பல இதயங்களின் உச்சிக்கே செல்லவிருப்பவர், இந்த இரண்டு
"ர" வும் சேர்ந்து தமிழ் சினிமாவை வேறு உச்சிக்கே கொண்டு செல்லப்போகிறது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.


இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கபாலி... இனி இந்த பெயர் பல முதலாளிகளின் பெயராக இருக்கும்.
கபாலி... இனி இது பல தெருக்களின் பெயராக இருக்கும்.
கபாலி... பள்ளிகளில் தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவன் பெயராக இருக்கும். கபாலி... நிச்சயம் ரஜினிக்கு ஒரு பெயராக இருக்கும். நன்றி வணக்கம்...!


- ரோகிணி, ஆர்ஜே.

English summary
Here a RJ's satire comment on Vairamuthu's hatred speech against Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil