துருவ் விக்ரம் ஜோடியாக என் மகளா? இதெல்லாம் ரொம்ப தவறுங்க… விளக்கம் கொடுத்த ஆர்கே செல்வமணி…

சென்னை: விக்ரமின் மகனான துருவ் ஆதித்ய வர்மா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

'மஹான்' படத்தில் அப்பா விக்ரமுடன் இணைந்து நடித்திருந்த துருவ், அடுத்து தெலுங்கு படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக ஆர்கே செல்வமணி, ரோஜா ஆகியோரின் மகள் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

விக்ரமின் மகனான துருவ், 2019ல் வெளியான 'ஆதித்யா வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதலில் இந்தப் படம் பாலா இயக்கத்தில் 'வர்மா' எனத் தொடங்கப்பட்டு பாதியிலேயே டிராப் ஆனது. அதனைத் தொடர்ந்து ஆதித்யா வர்மா என்ற டைட்டிலில் மீண்டும் உருவானது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக இது உருவானது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து விக்ரமுடன் 'மஹான்' படத்தில் நடித்தார்.

மாரி செல்வராஜுடன் கூட்டணி

மாரி செல்வராஜுடன் கூட்டணி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் ஆகியோருடன் துருவ் நடித்த மஹான் படத்தில், அவரின் நடிப்புக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் நேரடியாக அமேசான் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்க சென்றுவிட்டதால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. இதனிடையே துருவ. விக்ரம் 'மனசே' என்ற ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பத்தை அவரே எழுதி இயக்கி பாடியுள்ளார்.

தெலுங்கில் ஒரு படம்

தெலுங்கில் ஒரு படம்

இந்நிலையில், துருவ் விக்ரம் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், அதில், அவருக்கு ஜோடியாக ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதியின் மகள் அன்ஷுகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து ஆர்.கே.செல்வமணி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். "எங்கள் மகள் அன்ஷுகா மாலிகா அமெரிக்காவில் படித்து வருகிறார். அவர் இந்தியா திரும்ப இன்னும் 4 ஆண்டுகள் ஆகும். அதனால் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக தெலுங்கு படத்தில் அவர் நடிப்பதாக வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி" எனத் தெரிவித்துள்ளார்.

நடிக்க விருப்பம் இல்லை

நடிக்க விருப்பம் இல்லை

தொடர்ந்து பேசியுள்ள ஆர்கே செல்வமணி, "ஒருவேளை என் மகள் அன்ஷுகா மாலிகா இந்தியா திரும்பியவுடன் சினிமாவில் நடிக்க விரும்பினால், அதன் பிறகு யாருடன் ஜோடியாக நடிப்பது என அப்போது முடிவு செய்யப்படும். ஆனால் இதுவரை அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை" எனக் கூறியுள்ளார். இதனால், துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஆர்.கே.செல்வமணி - ரோஜா தம்பதியின் மகள் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X