இணையத்தை கலக்கும் சாலையோர வியாபாரியின் பாட்டு...அடுத்த பாடகர் ரெடியா ?

சென்னை : சோஷியல் மீடியாவில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரின் பாடல் செம பாப்புலர் ஆகி வருகிறது. உலகம் முழுவதும் இவரது பாடல் பரபரப்பாக பாடப்படுகிறது. அதனால் விரைவில் இந்த பாடலும், இவரும் சினிமாவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீப காலமாகவே சோஷியல் மீடியாவில் பாப்புலர் ஆகிறவர்களுக்கு சிவிமாவில் நிச்சயம் சான்ஸ் கிடைத்து விடுகிறது. தனக்கு லைக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காக யாரோ ஒருவர் சோஷியல் மீடியாவில் பகிரும் வீடியோ, அவரே எதிர்பாராத வகையில் பாப்புலராகி, அந்த வீடியோவில் இருப்பவருக்கு சினிமா சான்சும் கிடைத்து, அவரும் மக்களிடம் பிரபலமாகி வருவது நடந்து வருகிறது.

மலையாளத்தில் செம ஹிட்

மலையாளத்தில் செம ஹிட்

உதாரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் மலையாளத்தில் வெளிவந்தது சூப்பர் ஹிட்டான படம் ஐய்யப்பனும் கோஷியும். இந்த படத்தை செம ஹிட்டாக்கியதற்கு இதில் வரும் டைட்டில் சாங்கும் முக்கிய காரணம். பழங்குடியினர் இனத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் பெண்ணான நஞ்சம்மா, மலைவாழ் கிராமத்து நாட்டுப்புறப் பாடகியும் கூட. இவர் ஆடு மேய்க்கும் போது பாடிக் கொண்டிருந்த பாடலை யாரோ ஒருவர் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்.

டைட்டில் சாங்கே இதுதான்

டைட்டில் சாங்கே இதுதான்

இந்த வீடியோ செம டிரெண்ட் ஆனதால் அதை பார்த்த இசையமைப்பாளர் Jakes bejoy, அந்த பெண்ணை அழைத்து தனது இசையில் பாட சான்ஸ் கொடுத்து விட்டார். அதோடு நஞ்சம்மாவே இயற்றி, பாடிய, கலக்கத்த சந்தன மேளா பாடலை அவரையே பாட வைத்தார். இந்த பாடல் தான் ஐயப்பனும் கோஷியும் படத்தில் வரும் டைட்டில் சாங்.

வாய்ப்பு தந்த டி.இமான்

வாய்ப்பு தந்த டி.இமான்

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது. அஜித்தின் விஸ்வாசம் படத்தில் டி.இமான் இசையமைத்த கண்ணான கண்ணே பாடலை மிக உருக்கமாக, இனிமையான குரலில் பார்வை திறனற்ற இளைஞர் ஒருவர் பாடிய பாடல் வீடியோ சோஷியல் மீடியாவில் செம டிரெண்ட் ஆனது. இந்த வீடியோவை பார்த்த டி.இமான், அந்த இளைஞரை நேரில் வரவழைத்து பேசி பாராட்டி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நூச்சிபட்டி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்ற இளைஞருக்கு தனது இசையில் பாட வாய்ப்பும் வழங்கி உள்ளார்.

அடுத்த பாடகர் ரெடி

அடுத்த பாடகர் ரெடி

அந்த வரிசையில் உடைந்து போன பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் பாடிய பாடலும் சோஷியல் மீடியாவில் செம பாப்புலராக டிரெண்ட் ஆகி உள்ளது. இவரின் குரல் வளத்தை பார்த்து விட்டு ஏதாவது ஒரு இசையமைப்பாளர் தனது இசையில் பாட சான்ஸ் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மொழி புரியாவிட்டாலும் இவர் பாடும் பாடல் பலரையும் கவர்ந்துள்ளதால், இந்த பாடலும் கூட விரைவில் ஏதாவது ஒரு சினிமாவில் இடம்பெறலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X