பிக் பாஸ் வீட்டின் அடுத்த ரோமியோ… ரச்சிதாவுக்கு சைலண்டாக நூல் விடும் ராபர்ட் மாஸ்டர்…
சென்னை: கடந்த 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி இரண்டே வாரங்களில் களைக்கட்ட தொடங்கியுள்ளது.
டாஸ்க்களில் அடித்துக்கொள்ளும் போட்டியாளர்களுக்கு மத்தியில் சில ருசிகரமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
நிவாஷினியை ரூட்டு விட்ட அசல் கோளாறுவின் வாரிசாக இன்னொரு ரோமியோவும் பிக் பாஸ் வீட்டில் சம்பவம் செய்து வருகிறார்.

களைக்கட்டிய பிக் பாஸ் வீடு
கடந்த 9ம் தேதி கமல்ஹாசன் தொடங்கி வைத்த பிக் பாஸ் சீசன் 6 இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜிபி முத்து, சாந்தி இருவரும் பிக் பாஸ் வீட்டில் இல்லாத நிலையில், புதிதாக மைனா என்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில், சென்ற வாரத்தில் இருந்தே ஹவுஸ் மேட்ஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. அசீம் - ஆயிஷா, அசீம் - விக்ரமன், அசீம் - தனலெட்சுமி, அசீம் - அமுதவாணன் இப்படி எங்குப் பார்த்தாலும் பிக் பாஸ் வீட்டை அசீம் தான் வைப்ரேஷன் மோடில் வைத்துள்ளார். இன்னொரு பக்கம் அசல் கோளாறுவின் சேட்டைகள் ட்ரெண்டாகி வருகின்றன.

அசல் கோளாறு – நிவாஷினி ஜோடி
முதலில் குயின்ஷியிடம் இருந்து சேட்டையை தொடங்கிய அசல் கோளாறு, அடுத்து ஆயிஷாவுக்கு நூல் விட்டு பார்த்தார். அடுத்து நிவாஷினி பக்கம் சென்ற அவர், இப்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். தொடர்ந்து எதாவது ஒரு சில்மிஷங்களை செய்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அசல் கோளாறு - நிவாஷினி ஜோடிக்கு, சென்ற வாரம் கமல்ஹாசன் அகம் டிவி வழியே குட்டு வைத்தார். ஆனாலும், இன்னும் அவர்கள் தங்களது ரொமான்ஸை நிறுத்திய மாதிரி தெரியவில்லை.

ஆட்டத்தை தொடங்கிய புதிய ரோமியோ
பிக் பாஸ் வீட்டில் அசல் கோளாறுவின் அட்ராசிட்டிகள் ஏற்கனவே ஊர் பஞ்சாயத்தை கூட்டியுள்ள நிலையில், இப்போது அவர் வழியே ராபர்ட் மாஸ்டர் சைலண்டாக தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளார். ஆனால், இவரோ அசல் மாதிரி பலரையும் தேடிப் போகாமல் ஆரம்பத்தில் இருந்து ரச்சிதாவையே நோட்டம் விட்டு வருகிறார். தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டின் குத்துவிளக்கு கேட்டகிரியில் ரச்சிதாவை டிக் செய்த ராபர்ட் மாஸ்டர், அவரை சைட் அடிப்பதை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அந்த வெட்கம் தான் பாஸ் க்யூட்
அதிலிருந்து ராபார்ட் மாஸ்டர் ரச்சிதாவை சைட் அடிக்கும் காட்சிகள் அடிக்கடி பிக் பாஸ் கேமராவில் மாட்டிக்கொள்கிறது. இந்நிலையில், அமுதவாணன், விக்ரமன் ஆகியோருடன் ரச்சிதா பேசிக் கொண்டிருக்கும் போது ராபர்ட் மாஸ்டரும் அந்த ஜோதியில் ஐக்கியமாகிறார். அப்போது சின்சியராக அவர் ரச்சிதாவை சைட் அடிக்க, அதை ரச்சிதா பார்த்ததும் உடனே வெட்கத்துடன் ராபர்ட் மாஸ்டர் தலையை திருப்பிக் கொள்ளும் வீடியோ செம்ம வைரலாகி வருகிறது. பிக் பாஸ் ரசிகர்கள் இப்போது அசல் கோளாறுவை டிஸ்சார்ஜ் செய்துவிட்டு ராபர்ட் மாஸ்டரை வண்டியில் ஏற்றி ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











