»   »  எஸ்பிபிக்கு இளையராஜா காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புவதா.. கங்கை அமரன் கோபம்!

எஸ்பிபிக்கு இளையராஜா காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புவதா.. கங்கை அமரன் கோபம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காப்புரிமை பிரச்சனையை எழுப்பியுள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி இல்லாமல் எங்கும் பாடக் கூடாது என்று இசைஞானி இளையராஜா பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் இது குறித்து இளையராஜாவின் சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் கூறியிருப்பதாவது,

இளையராஜா

இளையராஜா

எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருக்கக் கூடாது. இது முட்டாள்தனமானது. இளையராஜாவுக்கு நான் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது.

மழை

மழை

இளையராஜாவின் இசை மழை போன்றது. அதை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம், ரசிக்கலாம். பாடல்களுக்கு காப்புரிமை கேட்பது சரியல்ல.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

ராயல்டி கொடுத்த பிறகு தான் மக்கள் என் பாடல்களை கேட்க வேண்டும் என்று இளையராஜாவால் நிபந்தனை விதிக்க முடியுமா? அவரின் பாடல்களை முணுமுணுக்கக் கூட ராயல்டி கேட்பாரா?

ராயல்டி

ராயல்டி

பாடகர்களிடம் ராயல்டி கேட்கிறாரே அவர் தியாகராஜ கீர்த்தனைகளை பாட ராயல்டி கொடுத்தாரா என்று கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
Music director Gangai Amaren has condemned his brother Isaignani Ilayaraja for sending notice to legendary singer SPB over royalty issue.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil