twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாதனைன்னு சொன்னாங்க...ஆர்ஆர்ஆர் படத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

    |

    சென்னை : உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்து, பல சாதனைகளை முறியடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் அமெரிக்காவில் மிகப் பெரிய சோதனையை சந்தித்து வருகிறது. இதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீசான முதல் நாளே பல படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து அனைவரையும் மிரள வைத்துள்ளது.

    RRR box office collection: 3 நாட்களில் இத்தனை கோடியா? உலக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராஜமெளலி!RRR box office collection: 3 நாட்களில் இத்தனை கோடியா? உலக பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்ட ராஜமெளலி!

    அமெரிக்காவில் அதிக வசூல்

    அமெரிக்காவில் அதிக வசூல்

    ஒரே நாளில் ரூ.257 கோடிகளை ஆர்ஆர்ஆர் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் கடந்த 2 நாட்களில் இந்த படத்தின் வசூல் 7 மில்லியன் டாலர்களை கடந்துள்ளது. அமெரிக்க பாக்ஸ் ஹிட்டில் வசூல் சாதனை படைத்த மூன்றாவது தெலுங்கு படம் ஆர்ஆர்ஆர் தான். இதற்கு முன் ராஜமெளலியின் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் தான் வசூல் சாதனை படைத்தன.

    இப்படி ஒரு சோதனையா

    இப்படி ஒரு சோதனையா

    ஆனால் அதே அமெரிக்காவில் தியேட்டர்களில் ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாதி படம் தான் திரையிடப்பட்டதாம். இரண்டாவது பாதி திரையிடப்படவில்லையாம். இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது, படத்தின் ரன்னிங் டைம் தானாம். 3 மணி நேரம் 1 நிமிடம் ஓடியதால் அமெரிக்க தியேட்டர் உரிமையாளர்களே ஷாக் ஆகி விட்டனராம். இதனால் தான் படத்தை பாதியில் நிறுத்தி உள்ளனர். இது ரசிகர்களிடம் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    ராஜமெளலி தந்த விளக்கம்

    ராஜமெளலி தந்த விளக்கம்

    ஏன் இத்தனை நீளமான படத்தை எடுத்துள்ளீர்கள். படத்தின் ரன்னிங் டைமை சுருக்க முடியாதா என பலர் ராஜமெளலியிடமே கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ராஜமெளலி, இது தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய கதையை விளக்குவதாகும். இது உணர்வுபூர்வமான கதை. அதனால் சுருக்க முடியாது. அப்படி செய்தால் படத்தின் சுவாரஸ்யம் போய் விடும் என்கிறார்.

    குறைக்க வாய்ப்பேயில்லை

    குறைக்க வாய்ப்பேயில்லை

    ஆர்ஆர்ஆர் படத்தில் அல்லூரி சீதாராம ராஜு கேரக்டரில் ராம் சரணும், கோமாரம் பீமா ரோலில் ஜுனியர் என்டிஆரும் நடித்துள்ளனர். ஆலியா பட், அஜய் தேவ்கன் ஆகியோரும் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் படத்தை சுருக்க முடியாது என்ற முடிவில் உறுதியாக இருக்கிறார் ராஜமெளலி. ஆனால் அதிகம் எதிர்பார்த்து, ஆசையாக பார்க்க வந்த படத்தை முழுவதுமாக பார்க்க முடியவில்லையே என அமெரிக்க ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    English summary
    In USA, RRR movie stopped in mid way, because of running time. This movie had a running time of 3 hours and one minute. American theatres shocked of this and stopped. In america theatres first half only screened. Second half didn't screened.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X