ஆர்ஆர்ஆர் டிரைலர் ரிலீஸ் ஒத்திவைப்பு...கடைசி நிமிடத்தில் என்னாச்சு ?

ஐதராபாத் : டைரக்டர் ராஜமெளலி இயக்கி உள்ள பிரம்மாண்ட படம் ஆர்ஆர்ஆர். ரெளத்திரம் ரணம் ருத்ரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியாபட், ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டிவிவி என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபஸ்ட் க்ளிம்ப்ஸ் மற்றும் ஃபஸ்ட் சிங்கிள் ஆகியன ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நட்பை சொல்லும் கதை

நட்பை சொல்லும் கதை

1920 களில் நடப்பது போன்று கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் ஆட்சியை எதிர்த்து போராடும் ஐதராபாத் நிஜாமின் கதை என்றாலும், நட்பை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ராஜமெளலி தான் இந்த படத்திற்கு கதை எழுதி, இயக்கி உள்ளார்.

காத்திருந்த ரசிகர்கள்

காத்திருந்த ரசிகர்கள்

இதனால் படம் எப்போது ரிலீசாகும், அடுத்த அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் டிசம்பர் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பெரிய அளவில் விளம்பரமும் செய்யப்பட்டு வந்தது.

டிரைலர் ரிலீஸ் ஒத்திவைப்பு

டிரைலர் ரிலீஸ் ஒத்திவைப்பு

இந்நிலையில் இன்று, தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய முடியாது. விரைவில் டிரைலர் வெளியிடும் புதிய தேதி அறிவிக்கப்படும் என டிவிவி என்டர்டைன்மென்ட்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரம்மாண்ட ரிலீஸ் திட்டம்

பிரம்மாண்ட ரிலீஸ் திட்டம்

இந்த தகவல் ராஜமெளலி, ஜுனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. தியேட்டர்களில் பிரம்மாண்டமாக படத்தை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ப்ரீ ரிலீஸ் விழாக்களை இந்த மாதத்தில் நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

பிரம்மாண்டமாக அறிவிப்புக்களை வெளியிட்டு விட்டு கடைசி நேரத்தில் டிரைலர் ரிலீசை எதற்காக ஒத்திவைத்தார்கள் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். டிரைலர் தள்ளி வைப்பிற்கான காரணம் ஏதும் இதுவரை சொல்லப்படவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X