பாகுபலி 2 சாதனையை ஆர்ஆர்ஆர் முறியடிக்கும்...மேடையில் அடித்துச் சொன்ன உதயநிதி

சென்னை : டைரக்டர் ராஜமெளலி இயக்கிய பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை ஜனவரி 7 ம் தேதி ரிலீசாக உள்ள ஆர்ஆர்ஆர் படம் நிச்சயம் முறியடிக்கும் என ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

டைரக்டர் ராஜமெளலி இயக்கிய ஆர்ஆர்ஆர் - ரெளத்திரம் ரணம் ருத்ரம் படம் ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் பல முக்கிய நகரங்களில் நடத்த திட்டமிட்டப்பட்டது.

ரத்தாகும் நிகழ்ச்சிகள்

ரத்தாகும் நிகழ்ச்சிகள்

ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக ஐதராபாத்தில் டிசம்பர் 30 ம் தேதி நடத்தப்பட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருவதால், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட இருந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

சென்னை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி

இந்நிலையில் சென்னையில் இன்று ஆர்ஆர்ஆர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் ராஜமெளலி, ராம் சரண், ஜுனியர் என்டிஆர், தமிழ் திரையுலகை சேர்ந்த சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.செளத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட காரணம்

இதில் கலந்து கொண்ட காரணம்

விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இரண்டு வருடத்திற்கு பிறகு சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கு ஒரே காரணம் ராஜமெளலி சார் தான். நான் அவரோ மிகப் பெரிய ஃபேன்.

பாகுபலி சாதனையை முறியடிக்கும்

பாகுபலி சாதனையை முறியடிக்கும்

ஆர்ஆர்ஆர் டீமுக்கு எனது வாழ்த்துக்கள். வந்ததுமே ராஜமெளலி சாரிடம் சொன்னேன். பாகுபலி 2 படத்தின் அத்தனை சாதனைகளையும் ஆர்ஆர்ஆர் படம் முறியடிக்கும் என்று. இந்த படத்தின் பாடல், டீசர் என அனைத்தும் மக்களிடம் நன்றாக ரீச் ஆகி உள்ளது.

டான்ஸ் ஆட தெரியாது

டான்ஸ் ஆட தெரியாது

என்னை டான்ஸ் ஆட கூப்பிட்டார்கள். சிவா ஓகே சொல்லி விடுவாரோ என பயந்தேன். சிலருக்கு டான்ஸ் ஆடினால் தான் கால் வலிக்கும், கழுத்து சுளுக்கும். ஆனால் இவர்கள் இருவரும் ஆடியதை பார்த்தாலே கழுத்து சுளுக்கும். என்னை சுத்தமாக டான்ஸ் ஆட வராது.

ராஜமெளலியுடன் நட்பு

ராஜமெளலியுடன் நட்பு

எனக்கு இந்த படத்தோட கனெக்ட் இருக்கு. 10 வருடத்திற்கு முன் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்தை துவங்கினோம். அப்போது ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த மகதீரா படம் தெலுங்கில் ரிலீசாகி செம ஹிட் ஆனது. அதை 2011 ல் தமிழில் டப் செய்து மாவீரன் என்ற பெயரில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ரிலீஸ் செய்தது. அது 10 வருடங்களுக்கு முன்பே செம ஹிட்டாகி அப்போதே தமிழகத்தில் ரூ.4 கோடி வசூல் கிடைத்தது.

ரெட் ஜெயின்ட் வெளியீடு

ரெட் ஜெயின்ட் வெளியீடு

மாவீரன் படத்தை தனக்கு பிடித்த சத்யம் தியேட்டரில் ரிலீஸ் செய்ய வேண்டும் என ராஜமெளலி கேட்டார். அது படியே செய்தோம். தற்போது ஆர்ஆர்ஆர் படத்தை 6 ஏரியாக்களில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் ரிலீஸ் செய்ய உள்ளது. சத்யம் தியேட்டர்ஸில் உள்ள 6 ஸ்கிரீன்களில் கண்டிப்பாக 5 ஸ்கிரீன்களில் இந்த படத்தை தான் திரையிட உள்ளோம். அதனால் கண்டிப்பாக ஹிட் ஆகும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X